திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

தளபதி 68 பட வாய்ப்பு பெற்ற பிக் பாஸ் பிரபலம்.. 18 வருடத்திற்கு பின் இணையும் கூட்டணி

Bigg Boss 7 celebrity Join In Thalapathy 68: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலத்திற்கு இப்போது தளபதி 68 படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. லியோ படத்திற்குப் பிறகு விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான அடுத்த கட்ட ஷெட்யூலை துருக்கியில் எடுக்க படகுழுவினர் திட்டமிட்டுள்ளனர். இன்னும் ஒரு சில தினத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது. டைம் டிராவலை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி இணைந்துள்ளார்.

இவர்களுடன் சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இவர்களுடன் 90களில் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த மைக் மோகன் இந்த படத்தில் தளபதிக்கு வில்லனாக நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இவர் மட்டுமல்ல 18 வருடத்திற்கு பிறகு மறுபடியும் விஜய்யின் தோஸ்த் ஆன நடிகர் யுகேந்திரன் தளபதி 68 படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

Also Read: இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சிக்கிய 5 பேர்.. பிக் பாஸ் வீட்டில் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்ட பிளேபாய்

தளபதி 68 பட வாய்ப்பை பெற்ற பிக் பாஸ் பிரபலம்

இந்தப் படத்தில் அவருக்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு திருப்பாச்சி படத்தில்  விஜய்யுடன் இணைந்து நடித்த யுகேந்திரன் ஐந்தாவது முறையாக இப்போது தளபதி 68 விஜய்யுடன் இணைந்துள்ளார். பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான யுகேந்திரன் விஜய்யுடன் பகவதி உள்ளிட்ட படங்களில் அவருக்கு நெருங்கிய நண்பராக நடித்து ரசிகர்களிடம் பேமஸானார்.

ஆனால் சமீப காலமாக இவருக்கு எதிர்பார்த்த அளவு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்போது யுகேந்திரன் தனது செகண்ட் இன்னிங்சை தளபதி 68 மூலம் துவங்கி உள்ளார். இனி யுகேந்திரன் அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான பட வாய்ப்பை தட்டி தூக்கப் போகிறார்.

Also Read: பிக் பாஸ் சீசன் 7ல் அதிகம் பேசப்பட்ட டாப் 5 பிரபலங்கள்.. வரலாற்றையே புரட்டி போட்ட கிளாமர் குயின்

- Advertisement -

Trending News