திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பயங்கர டஃப் கொடுப்பார் என்று நினைத்தால் டம்மி பீசா இருக்காரு.. நடிகரை கலாய்த்து தள்ளும் ஹவுஸ் மேட்ஸ்

Bigg Boss 7 Contestants: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு பிடித்தார் போல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் டஃப் கண்டஸ்டண்ட் என ஒருவரை நினைத்தார்கள். ஆனால் இப்போது அவர் பயங்கர டம்மி பீசு என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபிக்கிறார்.

அதிலும் நேற்று நடந்த வெயிட் பார்ட்டி டாஸ்க் பெண் போட்டியாளர்கள் மேக்கப் இல்லாமல் இருந்தால், அது நமக்கு ஒரு அட்வான்டேஜ் தான். அவங்க மூஞ்சிய எல்லாம் மேக்கப் இல்லாமல் பார்க்க சகிக்காது என பிரதீப் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

Also Read: 4வது நாளே போட்டியாளர்களை வச்சு பிதுக்கும் பிக் பாஸ் 7.. மேக்கப் இல்லன்னா இவங்க மூஞ்ச பார்க்கவே முடியாதே குருநாதா

ஒரு ரசிகர், அழகா இருக்க ஒரு பொண்ணுக்கு ஓட்டு போடுவாரா இல்ல, மேக்கப் இல்லாமல் என்னை போன்ற ஒரு ஆம்பளைக்கு ஓட்டு போடுவாரா? அதனால இந்த வெயிட் பார்ட்டி டாஸ்க்கில் தோற்று பெண்களிடம் இருக்கக்கூடிய அழகு சாதனை பொருட்களை பறிக்க வைத்து விடலாம். அதனால் நமக்கு தான் லாபம் என்று வீட்டில் இருக்கும் ஆண் போட்டியாளர்களுக்கு பிரதீப் மட்டமான ஐடியா கொடுக்கிறார்.

இருப்பினும் இதற்கு பிரதிப்பை தவிர யாரும் ஒத்துக்கல, அவர் பேசியதை பார்த்து அவங்களுக்கு சிரிப்பு தான் வந்துச்சு. இருப்பினும் பிரதீப் பேசியது பெண்களுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. என்னதான் போட்டியில் ஜெயிச்சாலும் பிரதீப் சொன்னதை முறியடிக்க வேண்டும், ரசிகர்களுக்கு மேக்கப் இல்லாமலும் தங்களைப் பிடிக்கும் என்பதை காட்ட, போட்டிருந்த மேக்கபை ரிமூவ் செய்து ஒரு நாள் முழுவதும் மேக்கப் இல்லாமலே இருந்து கெத்து காட்டுனாங்க.

Also Read: யோக்கியன் மாதிரி கவினை அடிச்சீங்க பிரதீப், இந்த லிப்லாக் சீன் எடுக்க 8 டேக்கா.? காட்டுத் தீயாய் வைரலாகும் புகைப்படம்

போயும் போயும் பெண்கள் மேக்கப் போடாமல் இருந்தால் ஜெயிப்பதற்கு சுலபமாக இருக்கும் என்ற இவருடைய மட்டமான எண்ணம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது என வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் எல்லாம் பிரதீப்பை கழுவி கழுவி ஊற்றினார்கள். இவருடைய மண்ட ஃபுல்லா எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதுதான் ஆழமாய் இருக்கு.

பிக் பாஸ் வீட்டில் பிரதீப் அவர் அவராகவே இல்லை. இப்படியே இருந்தா சீக்கிரம் அவருக்கு பைத்தியம் பிடித்து விடும். அந்த அளவிற்கு எந்த விஷயம் எடுத்தாலும் அவர் ஜெயிப்பதில் தான் குறியாக இருக்கிறார். இது வெளியில் இருந்து பார்ப்பதற்கு கேவலமா தெரியுது. இப்ப மட்டும் கவின் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தா நிச்சயம் பிரதீப் கொடுத்த அறையை திரும்பிக் கொடுத்து விடுவார்.

Also Read: அடிச்சு வாய ஒடச்சிடுவேன், போடா லூசு.. 5வது நாளே கலவர பூமியாக மாறிய பிக் பாஸ் வீடு

நாளுக்கு நாள் ஓவராக யோசித்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களையும் எரிச்சல் அடைய வச்ச பிரதீப்பையா பயங்கர டஃப் கொடுப்பார்னு நினைச்சோம். இது சரியான டம்மி பீசா இருக்கே என்று ஹவுஸ் மேட்ஸ் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து இவரை கலாய்த்து தள்ளுகின்றனர்.

Trending News