திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் இந்த மூணு பேர்ல ஒருத்தர் தான்.. கவின் விட்டதை பிடிக்கும் உயிர் நண்பன்

Bigg Boss Season 7: சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் என்டர்டைன்மென்ட் ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். இதுவரை 6 சீசன்கள் நிறைவடைந்த நிலையில் ஏழாவது சீசன் விஜய் டிவியில் நேற்று மாலை 6 மணிக்கு துவங்கி உள்ளது. இதில் மொத்தமாக 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இன்னும் நூறு நாட்களுக்கு கண்டெண்டுக்கு பஞ்சமே இருக்காது. அந்த அளவிற்கு காரசாரமான போட்டியாளர்களைத் தான் விஜய் டிவி தேர்வு செய்திருக்கிறது. அதிலும் இந்த முறை டைட்டிலை தட்டி செல்வது இந்த மூன்று பேர்களுள் ஒருவர்தான் என்று அடித்து செல்கின்றனர். இதில் மற்ற போட்டியாளர்களுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுக்கக் கூடியவராக நிச்சயம் நடிகர் யுகேந்திரன் இருப்பார்.

Also Read: முதல் நாளே பத்த வச்சிட்டியே பரட்டை பிக் பாஸ்.. 2வது வீட்டிற்கு துரத்தி விடப்பட்ட 6 போட்டியாளர்கள்

இவர் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் எக்கச்சக்க பாடல்களை பாடி இருக்கும் இவர், நடிகராகவும் டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். எனவே பல வருடங்களாக சினிமாவில் ஊறிக் கிடந்த இவருக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை எப்படி சமாளித்து டைட்டிலை தட்டி செல்வது என்ற பக்கா ஸ்டேட்டர்ஜியுடன் தான் உள்ளே நுழைந்துள்ளார்.

இவரைப் போலவே சின்னத்திரை ரசிகர்களிடம் செம ஃபேமஸ் ஆனவர்தான் பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகி வினுஷா தேவி. இவர் சிறு வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்து அம்மாவின் அரவணைப்பில் எல்லா கஷ்டங்களையும் பார்த்து வளர்ந்து வந்துள்ளார். ஏகப்பட்ட உருவ கேலிக்கு ஆளான வினுஷா, நிச்சயம் சீசன் 7ல் செம போல்ட் ஆன கண்டஸ்டனாக இருந்து பயங்கர டஃப் கொடுப்பார்.

Also Read: விஜய் டிவியை குத்தகைக்கு எடுத்த பிக் பாஸ்.. வேலியில் போற ஓணானை வேட்டியில் எடுத்து விடும் கூல் சுரேஷ்

அதேபோல் கவின் விட்டதை எப்படியாவது தட்டித் தூக்க வேண்டும் என அவருடைய உயிர் நண்பர் பிரதீப் ஆண்டனி இருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் கவின் இருந்தபோது அவரைப் பார்க்க அவரது வீட்டில் இருந்து யாரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வராத நிலையில், அவர் சார்பாக அவரது நண்பராக பிரதீப் ஆண்டனி தான் வந்திருந்தார். அப்போது அனைவரின் மத்தியிலும் கவினை பளார் என்று அறைந்து தனது நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தியவர்.

அப்படிப்பட்டவர் பிக் பாஸ் வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறெல்லாம் இருந்தால் பிரபலமாக முடியும் என்பதை நன்குத் தெரிந்துகொண்டு தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இவர் டைட்டிலை தட்டி தூக்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த மூன்று பேரில் ஒருவர் தான் பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் ஆகப் போகின்றனர். இவர்களுக்குள் தான் கடும் போட்டி நிலவும்.

Also Read: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள்.. அட இவங்க ரெண்டு பேரும் நிஜமான காதல் ஜோடியா!யுகேந்திரன்

Trending News