செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பிக் பாஸ் அர்ச்சனா விஜய் டிவிக்கு கொடுத்த முதல் பேட்டி.. குதர்க்கமாக பதிலளித்த டைட்டில் வின்னர்

Bigg Boss Title Winner Archana Interview: ரியாலிட்டி ஷோ மூலம் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். அந்த வகையில் கடந்த வாரம் சீசன் 7, 100 நாட்களை தாண்டி முடிவடைந்து இருக்கிறது. இதுவரை நடக்காத ஒரு அதிசயமாக வைல்ட் கார்டு மூலமாக போன அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார். அதற்கு காரணம் பிரதிப்பை துருப்பு சீட்டாக பயன்படுத்தி உள்ளே இருக்கும் போட்டியாளர்களை வச்சு செய்தது தான்.

அத்துடன் பிரதீப்புக்கு எதிராக போர் கொடி தூக்கிய போட்டியாளர்கள் யாரும் வின் பண்ணக்கூடாது என்று மக்கள் நினைத்ததால் அனைவரும் அர்ச்சனாவிற்கு ஓட்டு போட ஆரம்பித்தார்கள். எது எப்படியோ நடந்த சீசன்களிலே இரண்டாவது முறையாக ஒரு பெண் போட்டியாளர் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றிருக்கிறார். இதற்கிடையில் வெளியான மற்ற போட்டியாளர்கள் வெளிவந்ததும் ஒவ்வொரு இன்டர்வியூ கொடுத்து வந்தார்கள்.

அந்த வகையில் எப்பொழுது டைட்டில் வின்னர் அர்ச்சனா பேட்டி கொடுப்பார் என்று எதிர்பார்த்து நிலையில் தற்போது அதை விஜய் டிவி பூர்த்தி செய்து விட்டது. விஜய் டிவி இணையத்தில் அர்ச்சனையை வைத்து ஒரு நேரடி இன்டர்வியூவை எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also read: பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த காரணத்தை போட்டு உடைக்கும் போட்டியாளர்.. ஒண்ணுமே தெரியாத மாதிரி டிராமா போடும் பச்சோந்தி

இதில் அர்ச்சனாவிடம் சில கேள்விகள் முன் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அர்ச்சனா பிக் பாஸ் போவதற்கு முன் வெளியில் இருந்து 30 நாட்கள் பார்த்திருக்கிறேன். அப்பொழுது எனக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் பிரதீப். அதனால் தான் அவருக்கு அங்கு ஒரு தவறான முத்திரை குத்தப்பட்ட பொழுது அதற்கு எதிர் குரல் கொடுத்து நியாயம் கேட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அடுத்தபடியாக வெளியே வந்த பிறகு மற்ற போட்டியாளர்கள் உங்களுடன் பேசினார்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அர்ச்சனா ஒரு சில பேர் என்னிடம் பேச முயற்சி பண்ணினார்கள். அவர்களிடம் மட்டும் நான் பேசிக் கொண்டு வருகிறேன் என்று குதர்க்கமாக பதிலளித்து சமாளித்திருக்கிறார். அந்த வகையில் மாயா, பூர்ணிமா, ஜோவிகா கேங்க் இன்னும் அர்ச்சனாவிடம் பேசவில்லை என்பது தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்து உங்களுடைய ப்ராஜெக்ட் என்ன என்று கேட்ட பொழுது, தற்போது எனக்கு மிக அதிகமாக பொறுப்பு கூடிவிட்டது. அதனால் முதலில் எனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு ஒரு நல்ல என்டர்டைன்மென்ட் பண்ணும் விஷயமாக ஏதாவது ஒரு விஷயத்தில் என்னுடைய பங்களிப்பை கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார். இதுபோல தொடர்ந்து அர்ச்சனாவை விஜய் டிவி பயன்படுத்தி இன்னும் பல வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: பிக் பாஸ் குள்ளநரிக்கு அடித்த ஜாக்பாட்.. புதிய படத்தில் கமிட்டான சீசன் 7 போட்டியாளர்

Trending News