வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தினேஷுக்கு பிடித்த விச்சு ஃபோபியா.. கூட்டு சதி செய்யும் பிக்பாஸ் பூமர் அங்கிள்ஸ்

Biggboss 7: இந்த பிக்பாஸ் சீசனில் மட்டும்தான் போட்டியாளர்கள் தனக்காக விளையாடாமல் அடுத்தவர்கள் காலை வாரி விடுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். அதிலும் தினேஷ், விசித்ரா இருவருக்கும் அப்படி என்ன முன் ஜென்ம பகையோ தெரியவில்லை.

ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி டார்கெட் செய்து வருகின்றனர். அதில் தினேஷ் தான் சதா நேரமும் விச்சு விச்சு என அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் விசித்ராவின் கணவர் கூட அவர் பெயரை இப்படி கூறியிருக்க மாட்டார்.

அந்த அளவுக்கு தினேஷுக்கு விச்சு ஃபோபியா பிடித்திருக்கிறது. அதன்படி எப்படியாவது விச்சுவை வெளியேற்றிவிட வேண்டும் என தினேஷும் வாராவாரம் முயற்சி செய்கிறார். அதில் தற்போது அவர் விஷ்ணுவுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளார்.

Also read: பிக் பாஸ் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?. கேவலமான வேலை செஞ்சு சிக்கிய மாயா, பூர்ணிமா

அதன்படி டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் விஷ்ணு முதலில் நிக்சனை தூக்க வேண்டும் என பிளான் செய்கிறார். அதை அடுத்து பூர்ணிமா அடுத்ததாக மாயா என்று தன் பிளானை தினேஷிடம் சொல்கிறார். ஆனால் தினேஷ் விசித்ராவை முதலில் தூக்க வேண்டும் என அவருக்கு ஐடியா கொடுக்கிறார்.

உடனே விஷ்ணுவும் சரி அப்ப V-யை முதலில் அடிச்சி துரத்தி விடுவோம் என்று சொல்கிறார். இப்படியாக வெளிவந்துள்ள புரோமோவை பார்க்கும் போதே எரிச்சலாக தான் இருக்கிறது. ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் இரு அணிகளாக இருக்கும் போட்டியாளர்கள் யாரை தூக்குவது என்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர்.

Also read: மீண்டும் வேலையை தொடங்கிய காஜி நிக்சன்.. மாயா, பூர்ணிமா ஆசைப்பட்ட உமன் சேஃப்டி இதுதானா?

அதையும் பிக்பாஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். வார இறுதியில் ஆண்டவரும் கண்டு கொள்வதில்லை. இப்படி மகா மோசமாக இருக்கும் இந்த சீசனோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எண்டு கார்ட் போட்டால் பரவாயில்லை என்ற அளவுக்கு ஆடியன்ஸ் இப்பொழுது கதறி வருகின்றனர்.

Trending News