வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

காயத்ரி ரகுராம் இடத்தை பிடிக்க வரும் பிக் பாஸ் பிரபலம்.. தன்மானத்தை காப்பாற்ற இப்படியும் உருட்டலாமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பல போட்டியாளர்கள் சர்ச்சைகள் சிக்கி உள்ளார்கள். இதில் முதல் சீசனில் கலந்து கொண்டவர் காயத்ரி ரகுராம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மோசமான விமர்சனங்கள் தான் கிடைத்தது. அதன்பிறகு பிக் பாஸ் வீட்டில் இருந்த வெளியே வந்த காயத்ரி ரகுராம் பாஜகவில் இணைந்தார்.

சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி வந்த காயத்ரி ரகுராம் இப்போது இந்த கட்சியில் இருந்து விலகி விட்டார். மேலும் இந்த கட்சியில் பல அவதூறு விஷயங்கள் நடப்பதாக குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் தற்போது காயத்ரி ரகுராமின் இடத்தை பிடிக்க மற்றொரு பிக் பாஸ் பிரபலம் வந்துள்ளார்.

Also Read : தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்.. லவ் டுடே, பிக் பாஸ் பிரபலம் இணையும் புது படத்தின் டைட்டில்

விஜய் டிவியின் தொகுப்பாளரான பாலாஜியின் மனைவி நித்யா பாலாஜி சமீபத்தில் கைதானார். பாலாஜி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் பங்கு பெற்றார்கள். இதன் மூலம் மீண்டும் இவர்கள் இணைவார்கள் என எதிர்பார்த்த நிலையில் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

அதன் பிறகு இவர்கள் இருவரும் தற்போது தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு நித்யா மீது ஒரு புகார் கொடுக்கப்பட்டிருந்தது. நித்யா தனது எதிர் வீட்டில் உள்ளவரிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த பிரச்சனையின் காரணமாக இரவில் நித்யா எதிர் வீட்டு உரிமையாளரின் காரை சேதப்படுத்தி உள்ளார்.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 ஒட்டு மொத்த சர்ச்சைகளின் லிஸ்ட்.. ரெட் கார்ட் கொடுக்க வேண்டியவருக்கு டிராபியா.?

இந்த சிசிடி காட்சிகள் இணையத்தில் வெளியானது. இப்போது நித்யா ஜாமினில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த சூழலில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் ஆண் துணை இல்லாமல் தனியாக வாழ்வது இந்த சமூகத்தில் மிகவும் கொடுமையானது. அந்தப் பெண்ணுக்கு எப்படி பணம் வருகிறது என பலரும் கொச்சையாக பேசி வருகிறார்கள்.

தனி பெண்ணாக இங்கு சாதித்தவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஆகியோர்களை தொடர்ந்து இப்போது தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் இவர்பட்ட அவமானங்கள் நிறைய உண்டு. ஆனால் அதிலிருந்து மனம் தளராமல் போராடியதால் தற்போது ஆளுநராக உள்ளார்.

ஆனால் நானும் பாஜகவில் இணைந்து தனியாக வாழும் பெண்களுக்காகவும், குழந்தைகளுக்கும் ஆதரவாக இருப்பேன் என்று நித்யா கூறியுள்ளார். எனவே பாஜகவில் காயத்ரி ரகுராம் இருந்த பொறுப்பில் நித்யா வர உள்ளார். எதிர்விட்டார் போட்டிருந்த வழக்கில் இருந்து தப்பித்து, தன்மானத்தை காப்பாற்றிக்கொள்ள இப்படி உருட்டுகிறாரே நித்யா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : அசீம், விக்ரமன், ஷிவின் என பைனல் லிஸ்ட் வாங்கிய சம்பளம்.. வாரி வழங்கிய பிக் பாஸ்

Trending News