புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாக்கியலட்சுமி தொடரில் என்ட்ரி கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்.. பொழப்பு தேடி சீரியலுக்கு வந்த அவலம்

Bigg Boss Celebrity Giving Entry In Bhakyalakshmi: விஜய் டிவியின் டிஆர்பி தற்போது மந்தமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. இதை எப்படியாவது ஏற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் இப்போது பாக்கியலட்சுமி தொடரில் பிக் பாஸ் பிரபலம் ஒருவரை இறக்கி விடுகின்றனர். இதன் மூலம் டிஆர்பி ஏற வாய்ப்பு இருக்கிறது.

அதாவது பாக்யலட்சுமி தொடரில் சமீபத்தில் தான் நடிகர் ரஞ்சித் பழனிச்சாமி என்ற கேரக்டரில் என்ட்ரி கொடுத்தார். ஆனாலும் ஆரம்பத்தில் இருந்த சுவாரஸ்யம் தற்போது இல்லை. அதுமட்டுமின்றி கோபியும் இப்போது பழைய எனர்ஜி உடன் இல்லாமல் நடித்து வருகிறார். பாக்யாவும் ஏதோ வீட்டை வாங்கி விடுவேன் என்று சவால் விட்டு உருட்டிக் கொண்டிருக்கிறார்.

Also Read : இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் பெண்.. பிக் பாஸ் போட்டியாளராக லாக் செய்த விஜய் டிவி

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சையான போட்டியாளர்களை சீரியலில் இறக்கிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி தான் கதி என்று கிடந்தவர் தாடி பாலாஜி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

அதுமட்டுமின்றி ஈரோடு மகேஷ் உடன் இணைந்து சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது மனைவி நித்யாவுடன் பங்கு பெற்றார். அங்கு இவர்கள் இருவருக்கும் குழாயடி சண்டை கணக்காக பிரச்சனை ஏற்பட்டது. மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் தாடி பாலாஜியின் மனைவி புகார் கொடுத்து இருந்தார்.

Also Read : விவாகரத்தை ட்ரெண்ட் ஆக்கிய 4 விஜய் டிவி பிரபலங்கள்.. ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண உறவு!

இந்த சூழலில் விஜய் டிவியின் நிகழ்ச்சியிலும் தாடி பாலாஜிக்கு வாய்ப்பில்லாமல் போனது. இப்போது பொழப்புக்கு வழி தேடி விஜய் டிவி சீரியலில் இறங்கி இருக்கிறார். கண்டிப்பாக பாக்கியலட்சுமி தொடரில் அவரது ட்ராக் காமெடியை நோக்கி தான் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் பழனிச்சாமி மற்றும் தாடி பாலாஜி இருவரும் இணைந்து கோபியை கதி கலங்க வைக்க உள்ளனர். இதன் மூலமாவது பாக்கியலட்சுமி தொடர் சூடு பிடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தாடி பாலாஜி இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இதன் மூலம் மீண்டும் வெள்ளிதிரையில் கால் பதிக்க வாய்ப்பு இருக்கிறது.

Also Read : பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பிக்கு ஆப்பு

Trending News