வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்த வயசுல பொம்பள சோக்கு கேக்குதா?. கணவரை பற்றி அவிழ்த்து விட்ட பிக் பாஸ் பிரபலம்

Bigg Boss Celebrity: கிளி போல பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல இன்னொன்னு கேக்குது. தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இந்த நடிகை முதலில் யோகா கலைஞர், மாடலிங், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் இருந்தவர். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி ஒரு சில பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா, அதன் பின்பு வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனார். அதுமட்டுமல்ல சோசியல் மீடியாவிலும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார்.

Also Read: பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் இந்த மூணு பேர்ல ஒருத்தர் தான்.. கவின் விட்டதை பிடிக்கும் உயிர் நண்பன்

இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இதற்கிடையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் தன்னுடைய கணவர் துபாயில் வேலை செய்கிறார் என்ற நம்பிக்கையில் இந்தியாவில் சம்யுக்தா இருந்திருக்கிறார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், சம்யுக்தா போல் அழகான பொண்டாட்டி பத்தாது என்று அவருடைய கணவர் வேறொரு பெண்ணுடன் நான்கு வருடம் துபாயில் குடித்தனம் நடத்தி இருக்கிறார்.

Also Read: முதல் நாளே பத்த வச்சிட்டியே பரட்டை பிக் பாஸ்.. 2வது வீட்டிற்கு துரத்தி விடப்பட்ட 6 போட்டியாளர்கள்

இதைப் பற்றி சம்யுக்தாவிற்கு தெரிய வந்ததும் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பொண்டாட்டி, பிள்ளை இருக்கும்போது இன்னொரு பொம்பள சோக்கு கேக்குதா! என கணவரை ஆத்திரம் தீர திட்டி தீர்த்துள்ளார். அப்போதுதான் அவருடைய கணவர் எதற்காக அவர் மீது கடுப்பாக இருந்திருக்கிறார் என்பதும் புரிய வந்துள்ளது.

தன்னைவிட வேறொரு பொண்ணு அவருடைய வாழ்க்கையில் முக்கியம் என நினைத்த பிறகு, அவருடன் வாழக்கூடாது என்று சம்யுக்தா கணவரை விட்டு பிரிந்து வந்துவிட்டார். இருப்பினும் அந்த பிரிவிலிருந்து இன்னும் வெளிவர முடியாமல் தவித்து வருகிறேன் என்று சம்யுக்தா வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

Also Read: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள்.. அட இவங்க ரெண்டு பேரும் நிஜமான காதல் ஜோடியா!

Trending News