திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

குந்தவை திரிஷா காதலனுடன் டேட்டிங் செய்த பிக் பாஸ் பிரபலம்.. பகிரங்கமாக ஒத்துக் கொண்ட நடிகை

தற்போது 40 வயதை கடந்தும் சிங்கிளாகவே இருந்து வருகிறார் திரிஷா. ஆனால் அவரது வாழ்க்கையில் நிறைய காதல் சர்ச்சைகள் இடம்பெற்று இருந்தது. ஆனால் இப்போது எதுவுமே வேண்டாம் என்று படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் அவரது குந்தவை கதாபாத்திரம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து.

இப்போது விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷாவுக்கு 2015ல் வருண்மணியன் என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் திருமணம் நிறுத்தப்பட்டு இருவரும் பிரிந்தனர். மேலும் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் செய்து கொள்ளவில்லையாம்.

Also Read : விறுவிறுப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 ஆடிஷன்.. யாரு கலந்துக்குறாங்க, எப்ப துவங்கப்படுகிறது தெரியுமா.?

இந்நிலையில் பிக் பாஸ் பிரபலம் ஒருவருடன் வருண் மணியன் டேட்டிங் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து அந்த நடிகையிடம் நேரடியாகவே பத்திரிக்கையாளர் கேட்ட நிலையில் அவர் கூறிய பதில் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வையல் கார்டு என்ட்ரியாக நுழைந்தவர் நடிகை பிந்து மாதவி. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் பாதியிலேயே வெளியேறிவிட்டார். அதன் பிறகு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Also Read : அவ மார்க்கெட்டை குறைக்காமல் ஓய மாட்டேன்.. சபதத்திற்காக திரிஷா எடுத்த விபரீத முடிவு

அங்கு டைட்டில் வின்னர் பட்டத்தை அடித்தார். இந்நிலையில் சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் கதைக்கு தேவைப்பட்டால் ஆடையின்றி நடிக்க தயார் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பிந்து மாதவி இடம் டேட்டிங் செய்வது உண்மையா என கேள்வி கேட்கப்பட்டது.

உண்மை தான் என்று சொன்ன பிந்து மாதவி, இப்போது நடந்ததில்லை, அது வேறு காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று வெளிப்படையாக கூறினார். திரிஷாவை வருண் மணியன் பிரிந்ததற்கு பிறகு டேட்டிங் செய்தீர்களா என்ற கேள்விக்கு ஆம் என்று பிந்து மாதவி பதிலளித்து உள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read : கல்யாணம் ஆகாமலேயே 40 வயதில் திரிஷா சேர்த்து வைத்த சொத்தின் மதிப்பு.. லியோ ஜோடினா சும்மாவா! 

Trending News