திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

பாக்கியாவின் மருமகளை காதலிக்கும் பிக் பாஸ் போட்டியாளர்.. கோர்த்துவிட்ட விஜய் டிவி, சீரியல் முடிந்ததும் கல்யாணம்

Bigg Boss contestant: விஜய் டிவியில் சீரியல்கள், ரியாலிட்டி ஷோ, மக்களின் திறமைகளை வெளிக் கொண்டுவரும் பல நிகழ்ச்சிகளை வித்தியாசமாக ஒளிபரப்புவதால் மக்களின் பேவரட் சேனலாக விஜய் டிவி இடம் பிடித்திருக்கிறது. அதிலும் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு இல்லத்தரசிகளின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் தற்போது கதை எதுவும் இல்லாமல் அரைச்ச மாவை அரைப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வெறுத்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த நாடகத்தை முடித்துவிட்டு புது சீரியலை கொண்டு வாருங்கள் என்று மக்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் பாக்யாவின் மருமகளாக இருக்கும் அமிர்தா என்கிற அக்ஷிதா, பிக் பாஸ் போட்டியாளர் ஒருவரை காதலிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த போட்டியாளரும் வேறு யாரும் இல்லை பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடித்த VJவிஷால் தான். அந்த வகையில் விஷால் மற்றும் அக்ஷிதா இருவரும் சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வரும் பொழுது இவர்களுடைய புரிதல் ஒத்துப்போனதால் அங்கே காதல் மலர்ந்து விட்டது.

அப்பொழுது VJ விஷாலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து கொஞ்சம் வெளியேறி பிக் பாஸ்க்கு முயற்சி எடுக்கலாம் என்று அவசரமாக நாடகத்தை விட்டு வெளியேறினார். அதன்படி தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நுழைந்த விஜே விஷால், அக்ஷிதாவை காதலித்து வருவதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் பிக் பாஸ் சீசனை முடித்துவிட்டு வெளியேறிய பிறகு விஜே விஷாலுக்கும் அக்ஷிதாவுக்கும் திருமணம் நடைபெறும். அதற்குள் பாக்கியலட்சுமி சீரியலும் முடிவுக்கு வந்துவிடும். அந்த வகையில் இந்த ஜோடியை கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறது விஜய் டிவி. எது எப்படியோ தொடர்ந்து சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமண வாழ்க்கைக்குள் இணைகிறார்கள்.

அப்படித்தான் இப்பொழுது சிறகடிக்கும் ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடித்தவரும் வெற்றி வசந்தம் பொன்னி சீரியலில் பொன்னி கேரக்டரில் நடித்து வரும் வைஷ்ணவிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர்களுடைய கல்யாணம் கூடிய விரைவில் நடக்க இருக்கிறது.

Trending News