சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

மந்திரவாதி தந்திரவாதி யாருடைய பாட்ஷா பலிக்கும்.? முதுகில் குத்தி டைரக்ட் நாமினேஷனுக்கு வந்த கேப்டன்

Bigg Boss Season 7: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 55 எபிசோடுகளை தாண்டி இருக்கிறது. ஆனால் இப்பொழுது வரை யார் வின்னர் ஆவார் என்று யோகிக்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு போட்டியாளரின் உண்மையான குணம் மாறிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் ஆரம்பத்திலேயே மாயாவின் கேமை பிடிக்காமல் அவரை வெளியே அனுப்ப வேண்டும் என மக்கள் நினைத்து இருந்தார்கள்.

ஆனால் அவர் சேவ் ஆனதால் அடுத்தடுத்த நாட்களில் ஓரளவுக்கு மாயா விளையாட்டு பிடித்து போய்விட்டது. அதன் பின் மாயா பூர்ணிமா செய்த தில்லாலங்கடி வேலையை பார்த்ததும் சுத்தமாக இவர்களை வெறுத்து விட்டார்கள். இருந்தாலும் இவர்களை விட டம்மி பீஸ்கள் நிறைய இருப்பதால் அவர்கள் ஒவ்வொருவரும் வெளியேறிக் கொண்டு வருகிறார்கள்.

மந்திரவாதி தந்திரவாதி யாருடைய பாட்ஷா பலிக்கும்.?

இதற்கிடையில் அர்ச்சனா, விசித்ரா மற்றும் தினேஷ் இவர்கள் மூவரும் இப்போதைக்கு மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். அதிலும் அர்ச்சனா அவர் மீது எழும் குற்றச்சாட்டுகளை முறையாக எடுத்துரைக்கும் பொறுப்பில் பாயிண்ட் பாயிண்டாக பேசுவது ரொம்பவே நியாயமாக இருக்கிறது. அந்த வகையில் அர்ச்சனா போட்ட மந்திரத்தால் இவருக்கு வெளியே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அடுத்ததாக தினேஷ் தந்திரமாக மூளையை யூஸ் பண்ணி விளையாடி வருவது ஒரு நல்ல போட்டியாளருக்கு உதாரணத்தை எடுத்துரைக்கிறது.

Also read: இந்த மூணு விஷயத்தில் கமல் வாய திறக்கலைன்னா.. பிக் பாஸ்ஸின் மொத்த டிஆர்பியும் போச்சு

அடுத்ததாக விசித்ரா தற்போது ரெண்டுங்கெட்ட நிலைமையில் இருக்கிறார். ஒரு பக்கம் இவருக்கு மக்கள் ஆதரவு கொடுத்துட்டு வந்தாலும், இன்னொரு பக்கம் விசித்ராவின் விளையாட்டு ரொம்பவே எரிச்சல் படுத்துகிறது. ஓவர் கான்ஃபிடென்சில் விளையாடுகிறார் என்றும், இவருக்கு சாதகமாக ஒரு கேங்கை உருவாக்குகிறார் என்றும் விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரமாக தினேஷ் கேப்டனாகி இருக்கிறார். அதனால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் இவரை எப்படியாவது எவிக்ஷனுக்கு அனுப்ப வேண்டும் என்று திட்டத்தை தீட்டுகிறார்கள். இதற்கு பின்னணியில் வழக்கம் போல் மாயா மற்றும் பூரணமாவின் சூழ்ச்சி தான் காரணமாக இருக்கிறது. மாயா போட்டுக் கொடுத்த பிளான் படி பூர்ணிமா விஷ்ணுவை வைத்து காய் நகர்த்துகிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி விஷ்ணுவும் ஸ்மால் பாஸ் போட்டியாளர்களிடம் பேசி தினேஷுக்கு எதிராக திசை திருப்பி விட்டார். அதனால் அடுத்த வாரத்தில் டைரக்ட் நாமினேஷனுக்கு தினேஷ் வந்திருக்கிறார். நீங்கள் என்னதான் தினேஷை நாமினேட் பண்ணாலும் நாங்கள் வெளியே இருந்து அவருக்கு ஆதரவு கொடுப்போம் என்று மக்கள் மொத்தமாக திரண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் மக்களின் ஆதரவுப்படி அர்ச்சனாவின் மந்திரம் ஜெயிக்குமா அல்லது தினேஷின் தந்திரம் ஜெயிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: பதுங்கி நின்னு பாயப் போகும் 3 சாத்தான்கள்.. ஜால்ரா அடிக்கும் தொடுப்புகள், சிக்கப் போவது விச்சுவா அச்சுவா?

Trending News