திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

லிவிங் ரிலேஷன்ஷிப்பிற்கு சம்மதித்த அம்மா.. திருமணத்திற்கு முன்பே ஒரே வீட்டில் வாழும் பிக்பாஸ் ஜோடி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பிக்கப்படும் அந்த ஷோ போக போக சண்டை, அழுகை என ரணகளமாக மாறிவிடும். அதற்கு இடையில் சில காதல் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது.

இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலிக்க ஆரம்பித்த ஜோடி தான் அமீர், பாவனி. முதலில் அமீரின் காதலை ஏற்காத பாவனி நாளடைவில் அவருடைய குணத்தை புரிந்து கொண்டு காதலுக்கு சம்மதித்தார். அதைத்தொடர்ந்து அந்த ஜோடி அஜித்தின் துணிவு திரைப்படத்தில் கூட சிறு கேரக்டரில் நடித்தார்கள்.

Also read: ஏகே 62 டைட்டில் வெளியானது.. மீண்டும் வி சென்டிமென்டில் சிக்கிய அஜித்

அதன் பிறகு இப்போது வெள்ளி திரையில் அவர்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க போகும் படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. அதில் அமீர் ஹீரோவாக நடிப்பது மட்டுமல்லாமல் தன் காதலிக்காக இயக்குனர் அவதாரத்தையும் எடுத்திருக்கிறார்.

இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது இவர்களின் லிவிங் ரிலேஷன்ஷிப் பற்றிய செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது. தற்போது ஒரே வீட்டில் ஒன்றாக சேர்ந்து வாழும் இந்த பிக்பாஸ் ஜோடி பிரபல சேனலுக்கு தங்களின் வீட்டை சுற்றி காண்பித்து பேட்டி கொடுத்திருக்கின்றனர். அதில் தான் தங்களுடைய லிவிங் ரிலேஷன்ஷிப் பற்றிய ரகசியத்தை உடைத்து இருக்கின்றனர்.

Also read: வெள்ளித்திரையில் கலக்கிய 10 சின்னத்திரை பிரபலங்கள்.. அசத்தலான கெட்டப்

அதாவது சென்னையில் தனி பிளாட்டில் வசித்து வந்த பாவனியை அவரது அம்மாவே அமீருடன் சேர்ந்து தங்கிக் கொள்ளுமாறு கூறினாராம். அவரின் பாதுகாப்புக்காகவே இப்படி ஒரு யோசனையை அவர் கூறியிருக்கிறார். அந்த வகையில் லிவிங் ரிலேஷன்ஷிப்பிற்கு அரேஞ்ச் செய்தது அவரின் அம்மா தான் என்று பாவனி பப்ளிக்காக உளறி கொட்டி இருக்கிறார்.

மேலும் அமீர் தன் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்களுடன் தங்க வைத்திருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் அவருடைய கார்டியன் குடும்பமும் சென்னை வந்தால் அங்கு தான் தங்குவார்களாம். இப்படித்தான் தங்களுடைய லிவிங் ரிலேஷன்ஷிப் குடும்பமாக மாறி இருக்கிறது என்று இந்த ஜோடி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறது. இது இப்போது சில விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகின்றது.

Also read: ரச்சிதாவிற்கு 2வது திருமணம்.. ரகசிய காதலை அம்பலப்படுத்திய பயில்வான்

Trending News