செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

ஆண்டவரால கூட இந்த சீசனை காப்பாத்த முடியல.. 70 நாளாகியும் ஒரு ஆணியும் புடுங்காத பிக்பாஸ்

Biggboss 7: பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி 70 நாளாகிவிட்டது. ஆனாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த சுவாரசியம் மட்டும் இன்னும் வரவே இல்லை. இனிவரும் நாட்களிலும் அது இருக்குமா என்பதும் பெரிய கேள்விக்குறி தான். அந்த அளவுக்கு போட்டியாளர்கள் வெறும் வன்மத்தை மட்டுமே கக்கி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சீசனில் கமலும் அந்த சுவாரசியத்தை தரவில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் வார இறுதி எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். ஆனால் இப்போது ஏன்டா வார இறுதி வருகிறது என நினைக்கத் தோன்றுகிறது.

அந்த அளவுக்கு ஆண்டவரும் நிகழ்ச்சியை சூர மொக்கையாக கொண்டு செல்கிறார். மேலும் பாராபட்சமாக நடந்து கொள்வது, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காதது என அவருடைய அரசியல் ஆட்டமும் இதில் வெளிப்படையாக தெரிகிறது.

Also read: நீ பிக்பாஸுக்கு தேவையில்லாத ஆணி.. பூமர் அங்கிளை கிழித்து தோரணம் கட்டிய கமல்

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் சுவாரசியம் பற்றி கமல் ஒரு பெரிய சொற்பொழிவு ஆற்றினார். ஆனால் அதை போட்டியாளர்கள் பின்பற்றுவார்களா என்பது சந்தேகம் தான். மேலும் மணியின் புது சபதம், அர்ச்சனாவின் மன்னிப்பு என சில சம்பவங்களும் நடந்தது.

அதேபோன்று ஒரு சில இடங்களில் கமலின் பேச்சு ரசிக்கும் படியாகவும், கைதட்டும் படியாகவும் இருந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி அடுத்த சீசன் ஆரம்பிக்கும்போது கமல் ரிட்டயர்மென்ட் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

இப்படியாக நகர்த்துவரும் இந்த சீசனில் இதுவரை போட்டியாளர்கள் எந்த ஆணியும் புடுங்கவில்லை. ஆனால் கமலின் பேச்சால் தெளிவு பெற்றுள்ள ஹவுஸ் மேட்ஸ் இந்த வாரம் நமக்கான சுவாரசியத்தை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: கமல் போதைக்கு ஊறுகாயான நிக்சன்.. பக்கா அரசியல் கேம் ஆடிய நார்த் ஆண்டவர்

Trending News