ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஒருநாள் பிக் பாஸுக்கு இவ்வளவு லட்சம் சம்பளமா? சரத்குமாருக்கு அடித்த அதிர்ஷ்டம்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எப்போதுமே பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டும்போது அதற்கு முன்னதாக ஒரு குறிப்பிட்ட பணத்தை எடுத்துக்கொண்டு போட்டியாளர்களில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்ற டாஸ்க் வைக்கப்படும்.

கடந்த சீசனில் இளம் நடிகை கேப்ரில்லா தனக்கு கிடைத்த 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். இந்நிலையில் இந்த சீசனிலும் அதற்கான நேரம் வந்துவிட்டது. இம்முறை 5 லட்சம் இல்லை வெறும் மூன்று லட்சம் தான்.

மேலும் முதல் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரத்குமார் அந்த பணத்தை எடுத்து வந்தது தான் அனைவருக்கும் ஆச்சரியமே. சரத்குமார் எதற்காக திடீரென்று விஜய் டிவியில் என்று கொடுக்க வேண்டும் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் திடீரென சரத்குமார் உள்ளே வந்தது அனைவருக்குமே அதிர்ச்சிதான். தான். வெறும் ஐந்து நிமிடம் வருவதற்கு சரத்குமாருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் தான் தலைசுற்ற வைக்கிறது.

சரத்குமார் எடுத்து வந்தது என்னவோ வெறும் மூன்று லட்சம் தான். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் சுமார் 10 லட்சம் என்கிறார்கள் விஜய் டிவி வட்டாரங்கள். திடீரென சரத்குமாருக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்து உள்ளே கூட்டி வர காரணம் என்னவென்று பார்த்தால் விரைவில் ஓட்டிட்டு தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதால் ஒருவேளை அதற்கான தொகுப்பாளர் வேலையை சரத்குமார் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறுகின்றனர்.

bb5-kamal
bb5-kamal

Trending News