வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிக் பாஸ் பாத்திமா பாபு.. வெளிவந்த புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

செய்தி வாசிப்பாளர், அதிமுக வின் தேர்தல் பிரச்சார பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்ட பிரபலம் திருமதி ஃபாத்திமா பாபு.

விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் இதில் கடந்த ஆண்டு நடந்த சீசனில் கலந்து கொண்டவர் தான் இந்த பார்த்திமா பாபு.

இவர் 1989-ல் இருந்து தூர்தசனில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர், பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான கல்கி திரைப்படம் தான் இவர் வெள்ளித்திரையில் தோன்றிய முதல் பிரதி.

சென்னையில் வசித்து வரும் இவர் திடீர் உடல் நலக்குறைவால் பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் ஏற்கனவே கொரனாவால் பாதிக்கப்பட்டதும் அதற்காக அவர் போராடி வெறும் நான்கே நாட்களில் சரி செய்ததும் அவரே யூடியூப் பக்கத்தில் குறிப்பிட்டு கானொளி பதிவிட்டிருந்தார்.

மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக கல் இருப்பதாகவும் அதனை சர்ஜரி மூலம் அகற்றியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

fathima-babu
fathima-babu

Trending News