தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பாப்பை உருவாக்கி இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் தான். இந்நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். முன்னதாக வெளியான நான்கு சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல் இதில் பங்கேற்ற போட்டியாளர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள்.
அந்த வரிசையில் மிகவும் முக்கியமானவர் தான் பாலாஜி முருகதாஸ். இவர் இறுதியாக வெளியான பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். அந்த சீசனில் நடிகர் ஆரி முதல் இடத்தையும், பாலாஜி இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நான்காவது சீசனில் பாலாஜி சர்ச்சை நாயகனாகவே வலம் வந்தார். பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி சக போட்டியாளரான நடிகை ஷிவானியுடன் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். சனம் ஷெட்டி குறித்து ஆபாசமாக பேசியது, வயதில் மூத்தவர்களிடம் மரியாதை குறைவாக பேசுவது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் பாலாஜி சிக்கி வந்தார்.
இருப்பினும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் அதிகம். அதற்கு முக்கிய காரணம் இவரது உடல் கட்டு தான். சிக்ஸ் பேக்குடன் கட்டுமஸ்தான உடம்புடன் காணப்பட்ட பாலாஜிக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர். இந்நிலையில் பாலாஜி சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதனை பார்த்த ரசிகர்கள் சிலர் உடலை விட கால் குச்சியாக இருப்பதாக கேலி செய்தனர். அதிலும் ஒரு சிலர் ‘Don Skip Leg Days Bro’ என்று கமன்ட் செய்தனர். இதனை கண்டு கடுப்பான பாலாஜி, இதற்கு பதில் அளிக்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உடற்பயிற்சி செய்துவிட்டு பேண்டை கீழே இறக்கி தன் தொடையின் பலத்தை காண்பித்து பதிலடி கொடுத்துள்ளார்.
