வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சைலன்டாக திருமணத்தை முடித்த பிக் பாஸ் விக்ரமன்.. கலக்கலாக வெளியான புகைப்படங்கள்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் தான் விக்ரமன். பத்திரிக்கையாளரான இவர் பல பிரபலங்களை முகத்திற்கு நேராக கடுமையான கேள்விகளை கேட்டு இருக்கிறார்.

bigg-boss-vikraman

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அறம் வெல்லும் என்ற ஹேஷ் டேக் மூலம் விக்ரமன் ட்ரெண்டாகி இருந்தார். ஆனாலும் அசீம் இடம் டைட்டில் வின்னர் பட்டத்தை பறிகொடுத்தார்.

vikraman-marriage

ஆனாலும் அசீமை காட்டிலும் விக்ரமனுக்கு தான் ஆதரவு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. இந்நிலையில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று விக்ரமன் கூறியிருந்தார்.

vikraman

ஆனால் சமீபத்தில் அவருக்கு சென்னை கடற்கரையில் உள்ள ரிசா்ட்டில் சைலன்டாக திருமணம் நடந்திருக்கிறது. ப்ரீத்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

vikraman

ப்ரீத்தி இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் உடன் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

vikraman

மேலும் விக்ரமன் திருமண கொண்டாட்டத்தில் பிக் பாஸ் பிரபலங்களான ரக்ஷிதா, சிவின் மற்றும் நமிதா ஆகியோர் பங்கு பெற்று மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

Trending News