வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

லிவிங் டு கெதருக்கு ஓகே சொன்ன பிக்பாஸ் நடிகை.. சினிமா வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். பெங்களூரைச் சேர்ந்த ரைசா கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பின்பு மாடலிங்கில் ஆர்வம் காட்டி 2011 இல் மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றார்.

அதன் பிறகு வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் சீசன் 1 இல் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருந்தது. ரைசா, பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

ரைசா திரைப்படங்களில் நடிப்பதுடன் மாடலிங்ல மிகவும் பிஸியாக உள்ளார். பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து காதலிக்க யாருமில்லை படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தி சேஸ், எஃப் ஐ ஆர், சூர்ப்பனகை ஆகிய படங்களில் கமிட்டாகி உள்ளார்.

இவ்வளவு பிஸியாக இருக்கும் ரைசா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள ரைசா, அடிக்கடி ஏதாவது பதிவிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வார்.

அதேபோல் ரைசாவின் ரசிகர் ஒருவர் பியார் பிரேமா காதல் படத்தைப் போல நிஜ வாழ்க்கையிலும் லிவிங் டு கெதர் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பீர்களா என்று கேட்டனர்.

அதற்கு ரைசா, லிவிங் டு கெதர் வாழ்க்கை முறை எனக்கு சம்மதம்தான், நல்ல ஆண் நண்பன் கிடைத்தால் ஒன்றாக வாழ்வதில் நான் ஆர்வமாக தான் உள்ளேன் என்று பதிலளித்தார். இதைக் கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

Trending News