வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குள்ளநரி கூட்டத்தை கிழித்து தொங்க விட்ட அச்சு.. களத்தில் குதித்த விச்சு, ரணகளமான பிக்பாஸ் வீடு

Biggbosss 7: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்டு கார்ட் என்ட்ரி வந்ததுமே ஆட்டம் களைகட்ட தொடங்கியது. அதில் தற்போது நடந்திருக்கும் பிரதீப்பின் வெளியேற்றம் மொத்த விளையாட்டையும் மாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் விசித்ரா, அர்ச்சனா இருவரும் இப்போது ஃபுல் ஃபயர் மோடில் இருக்கின்றனர்.

ஆண்டவர் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றியதற்கு விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்ட வெகுசிலர் ஆட்சேபம் தெரிவித்தனர். அந்த மனநிலை நேற்றைய எபிசோடிலும் தொடர்ந்தது. இந்த வாரம் விஷபாட்டில் மாயா கேப்டனாக பொறுப்பேற்றதை பார்த்ததுமே சம்பவம் இருக்கு என்று நமக்கெல்லாம் உறுதியாக தெரிந்தது.

அதற்கேற்றார் போல் அவரும் தனக்கு கட்டுப்படாத சிலரை அப்படியே அலேக்காக தூக்கி ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் போட்டார். அதில் மூவர் அணி கூட்டணியும் உண்டு. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட நாமினேஷன் தான் நேற்றைய ரணகளமான சம்பவத்திற்கு காரணமாக அமைந்தது.

Also read: பிரதீப்புக்கு ரெக்கார்ட் கொடுக்க மாயாக்கு என்ன தகுதி இருக்கு.? 6 வருடங்களுக்கு முன்பே இருந்த தகாத உறவு

அதாவது விசித்ரா ரெட் கார்ட் தவறாக பயன்படுத்தப்பட்டது என ஒரு காரணத்தை கூறியிருந்தார். அதை வழக்கம் போல் பிக்பாஸ் போட்டு கொடுத்த அடுத்த நிமிடம் சண்டை ஆரம்பித்தது. மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு, நிக்சன் என ஐவரும் ரவுடிகள் போல் விசித்ராவை வம்புக்கு இழுத்தனர்.

அவரும் எல்லாத்துக்கும் ரெடி என்ற கதையாக களத்தில் குதித்த நிலையில் அர்ச்சனாவின் என்ட்ரி தான் யாரும் எதிர்பாராததாக இருந்தது. நம்ம அழுகாச்சி அச்சுவா இது என்று வியக்கும் வகையில் ஒவ்வொரு பாயிண்டையும் நெத்தியடியாக பேசினார். இதுதான் அந்த ஐவர் கூட்டணிக்கு இன்னும் வெறியை ஏற்றியது.

ஆனாலும் தந்திரத்தோடு பிரதீப்பை அவமானப்படுத்தி வெளியேற்றிய இந்த குள்ளநரி கூட்டத்தை அர்ச்சனா கிழித்து தொங்கவிட்டு விட்டார். இதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பலரும் எங்களுடைய ஆதரவு அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் மூவருக்கும் தான் என கூறுவதை பார்க்கும் போது இந்த வார இறுதி நமக்கு பல ஆச்சரியங்களை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: பிரதீப்பை உள்ள கொண்டு வர சரியாக காய் நகர்த்தும் விசித்ரா.. மீண்டும் மீண்டும் சேர்ந்து அசிங்கப்படும் ஏஜென்ட் டீம்

Trending News