வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஆண்களுக்கு வெற்றிக்கனி பெண்களுக்கு வீட்டுப் பணி பிக் பாஸ் செஞ்ச சம்பவம்.. ரகசியமாக விட்டுக் கொடுத்த முத்து

Vijay Tv Bigg boss 8: பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இப்பொழுது வரை ஆண்கள் அணி சுறுசுறுப்பாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதால் வெற்றியை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் அறிவித்த டாஸ்க்கிலும் ஆண்கள் அணி வெற்றி பெற்று இருக்கிறது. அதாவது பெண்கள் அணியில் இருந்து ஐந்து பேரும் ஆண்கள் அணியிலிருந்து ஐந்து பேரும் தேர்வு செய்து விளையாட வைக்க வேண்டும்.

அந்த வகையில் பெண்கள் அணியில் இருந்து தர்ஷா, ஜாக்லின், சௌந்தர்யா, சுனிதா, முத்து விளையாடினார்கள். அதே மாதிரி ஆண்கள் அணியில் இருந்து அருண், பவித்ரா, சத்தியா, அர்னாவ், ஜெஃப்ரி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இப்படி இரு அணிகளும் விளையாடும் பொழுது கடைசி பாய்ண்டுக்கு முன்னாடி வரை இரண்டு அணிகளும் இணையாக இருந்தார்கள்.

ஆண்கள் அணிகளுக்கு வெற்றி கிடைக்க ரகசியமாக விளையாடிய முத்து

அப்பொழுது கடைசியாக விளையாடும் நபரால் வெற்றி யாருக்கு என்று தீர்மானிக்கப்படும் என்ற சூழ்நிலையில் இருந்த பொழுது அருண் சற்று பயந்து போய்விட்டார். அந்த வகையில் பிக் பாஸ் சொல்லும் டாஸ்க் எனக்கு தெரியவில்லை என்றால் எனக்கு பதில் வேற யாரையாவது விளையாடலாமா என்று கேள்வி எழுப்பினார். அதன்படி இதற்கு ஜட்ஜ் ஆக இருந்த தர்ஷிகா, பிக் பாஸ் இடம் கேள்வி கேட்டார்.

அதற்கு பிக் பாஸும் அருண் சொன்னதுக்கு சம்மதம் என்று தெரிவித்து ஆண்கள் அணிக்கு மறைமுகமாக சப்போர்ட் வைத்து பெண்களை அணிக்கு ஒரு ஆப்பு வைத்து விட்டார். கடைசியில் சொன்னபடி டாஸ்க் முத்து மற்றும் அருண் இருவரும் விளையாடும் அளவிற்கு இருந்தது. ஆனால் அருண் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் கலந்து கொண்டு ஜெயித்து விட்டார்.

அத்துடன் முத்து விளையாடும் பொழுது இதில் நம் தோற்றால்தான் ஆண்கள் அணிக்கு வெற்றி கிடைக்கும் என்ற நோக்கத்தில் பொறுமையாகவும் அசால்டாகவும் விளையாண்டது அப்பட்டமாக தெரிகிறது. அதனால் வேணும் என்று தான் முத்து, பெண்கள் அணிக்கு சப்போர்ட் செய்வது போல் செய்து ஆண்கள் அணியை வெற்றி பெற வைத்து விட்டார்.

கடைசியில் பிக் பாஸ் ஆண்கள் அணிக்கு வெற்றிக்கனி கிடைத்துவிட்டது. பெண்கள் அணிக்கு வீட்டு பணி கிடைத்து விட்டது என்று கலாய்த்து விட்டார்கள். இருந்தாலும் முத்து செய்த சொதப்பலுக்கு நானே எல்லா வேலையும் பார்க்கிறேன் என்று பெண்கள் அணியிடம் சொல்லி அனைவரையும் நம்ப வைக்கிறார். அதாவது இந்த டாஸ்க்கில் எந்த அணி தோற்க்கிறதோ அவர்கள் தான் வீட்டில் இருக்கும் அத்தனை வேலைகளையும் பார்க்க வேண்டும்.

பாத்திரம் கழுவுவது முதல் பாத்ரூம் கழுவுற வரை அனைத்து வேலைகளையும் பார்க்க வேண்டும் என்று பிக் பாஸ் ஒரு ஆப்பு வைத்திருக்கிறது. அதன்படி பிக் பாஸ் இடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை வீட்டில் எல்லா வேலையும் பெண்கள் அணி தான் பார்க்க வேண்டும் என்று தீர்மானம் ஆகிவிட்டது. கடைசியில் ஆண்களிடம் ஒற்றுமை இருந்ததால் அவர்களுடைய வெற்றி உறுதியாகிவிட்டது. தற்போது இந்த சந்தோஷத்தை ஆண்கள் அணி கொண்டாடி வருகிறார்கள்.

Trending News