சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பொம்மை டாஸ்க் பின் சூடு பிடிக்கும் பிக் பாஸ்.. கேம் சேஞ்சராக மாறிய 2 போட்டியாளர்கள், அலப்பறை பண்ணும் விஷால்

Vijay Tv Bigg Boss 8 Tamil: 50 நாள் முடிந்த பிறகு தான் பிக் பாஸ் வீடு சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. அந்த வகையில் எட்டாவது வாரத்தில் ஆரம்பித்த பொம்மை டாஸ் மூலம் விறுவிறுப்பாக போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இந்த வாரத்தில் தலைமை பொறுப்பை ஏற்று சரிவர செய்து வரும் தீபக் தான். ஆனால் இவருடைய பதவியை பறிக்க வேண்டும் என்பதற்காக மஞ்சுரி நரி தந்திரத்தை பயன்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தீபக் மற்றும் அருணை ட்ரிகர் பண்ணும் விதமாக சில வார்த்தைகளை வச்சு பேசி டார்கெட் பண்ணுகிறார். இதனால் பொறுமை இழந்த தீபக், மஞ்சுரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கொஞ்சம் ஆவேசமாக பேச ஆரம்பித்து விட்டார். உடனே இதுதான் சான்ஸ் என்று மஞ்சரி, தீபக்கின் தலைமை பொறுப்பை நீக்க வேண்டும் என்பதற்காக ஒரு பூவை பறித்து விட்டார்.

ஏற்கனவே தீபக் மீது பழிவாங்கும் உணர்ச்சி உடன் இருந்த சாட்சினா ஒரு பூவை பறித்து விட்டார். அந்த வகையில் எப்படியாவது தீபக்கை தலைமை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்கு சிலர் தந்திரங்களை பண்ணி வருகிறார்கள். ஆனாலும் இந்த வாரத்தில் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் அமைவதற்கு முக்கிய காரணம் தீபக்கின் தலைமை பொறுப்பு தான்.

இந்த சூழலில் தற்போது இரண்டு பேர் கேம் சேஞ்சராக மாறி இருக்கிறார்கள். அதாவது இதுவரை முத்துக்குமாருக்கு மட்டும் மக்களின் சப்போர்ட் அதிகரித்து இருந்தது. ஆனால் முத்துக்குமார், சாட்சினாவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக சில விஷயங்களை செய்வதால் பார்ப்பவர்களை எரிச்சல் படுத்தி விட்டது. அதனால் தீபக் மற்றும் ஜாக்லின் பக்கம் மக்கள் திரும்பி விட்டார்கள்.

இந்த நிலையை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இவர்கள் இருவரும் நிலையான விளையாட்டு விளையாடி வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனை அடுத்து ராணவ் தன்னிச்சையாக விளையாட ஆரம்பித்தது பார்க்க நன்றாக இருந்தது. ஆனால் இதை கெடுக்கும் விதமாக விஷால், ராணவை தூண்டிவிட்டு தன்னுடைய கண்ட்ரோலில் வைக்கும் அளவிற்கு அலப்பறை பண்ணுகிறார்.

Trending News