திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

என்னது நரியா, ஹே அமுல் பேபி.. விஷ்ணுவை திருப்பி அடிக்கும் கர்மா, கோர்த்து விட்ட பிக்பாஸ்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் வட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அதிலும் நாம் எதிர்பார்க்காத போட்டியாளர்கள் எல்லாம் கோதாவில் இறங்கி சண்டை போடுவது இன்னும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தற்போது வெளியான ப்ரோமோ நிச்சயம் வேற லெவல் தான்.

அதன்படி பிக்பாஸ் இந்த வார வீட்டின் கேப்டன் தினேஷுக்கு ஒரு சீக்ரெட் டாஸ்க்கை கொடுக்கிறார். மொத்த போட்டியாளர்களும் ஒன்று கூடி இருக்கின்றனர். அப்போது நானும் ரவுடிதான் என துள்ளிக் கொண்டிருக்கும் விஷ்ணு தினேஷை வம்புக்கு இழுப்பது போல் பேசுகிறார்.

யாருமே டாஸ்க் ஒழுங்கா பண்ணல என தினேஷ் சொல்ல உடனே விஷ்ணு இவருக்கு யாராவது ஒரு கேரக்டர் கொடுங்கப்பா என சீண்டுகிறார். இப்படி ஆரம்பிக்கும் வாக்குவாதத்தில் தினேஷ் ஹே என்று சொன்னதை விஷ்ணு டேய் என தவறாக புரிந்து கொண்டு மல்லு கட்டுகிறார்.

Also read: ஒரே பெட்டில் மாயா, பூர்ணிமா செய்த மட்டமான வேலை.. பிக் பாஸில் விளக்கு பிடிக்க வேற 70 கேமராவா?

அதைத்தொடர்ந்து நடந்த சண்டையில் விஷ்ணு நரி என்று சொன்னதால் கடுப்பான தினேஷ் அமுல் பேபி என்று கூறி அவரை ஆஃப் செய்கிறார். நிச்சயம் இதை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இதை பார்க்கும் போது கடந்த வாரம் ஜோவிகாவை விஷ்ணு குழந்தை என கிண்டல் பண்ணியது தான் நினைவுக்கு வருகிறது.

இதைத்தான் பூமராங் என்பார்கள். தற்போது இந்த ப்ரோமோவை ரசிகர்கள் ஃபயர் விட்டு கொண்டாடி வருகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கதையாக இருந்தது மாயாவின் ரியாக்ஷன்.

Also read: மூளை இல்லாத முட்டா பீசு.. பலியாடை தீனி போட்டு வளர்க்கும் பிக்பாஸ் மாயா

அதாவது விஷ்ணு தினேஷ் சண்டை போடும் போது என்ன ஒரு ஆனந்தம் இந்த கரடி மூஞ்சிக்கு என சொல்லும் படியாக அவர் சந்தோஷத்தில் துள்ளி குதித்து செய்த சேட்டை குபீர் சிரிப்பை வரவழைத்தது. இப்படியாக வெளிவந்துள்ள இந்த வீடியோ அடுத்த ப்ரோமோவுக்கான ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டது.

Trending News