திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சீரியலில் ரொமான்டிக் காட்சிகளில் எல்லை மீறி நடிக்கும் பிக் பாஸ் பிரபலம்.. டிஆர்பியில் இடம் பிடிக்க மட்டமாக இறங்கிய ஜீ தமிழ்

Zee Tamil Serial: பொதுவாக சின்னத்திரை மூலம் சீரியலுக்கு என்று மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. தினமும் வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு விஷயம் சீரியல்தான். ஒரு காலத்தில் கண்ணீர், காமெடி, சென்டிமென்ட், காதல் என அனைவரும் இருந்து பார்க்கும்படி காட்சிகள் இருந்தது. ஆனால் தற்போது உள்ள சில சீரியல்களில் எல்லை மீறும் காட்சிகள் அளவுக்கு அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது.

அதுவும் டிஆர்பி ரேட்டிங்கில் ஒவ்வொரு சேனலும் அதிகமான புள்ளிகளை பெற வேண்டும் என்பதற்காக போட்டி போட்டு வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவி தான் எப்போதும் டாப் என்பதற்கு ஏற்ப சீரியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இரண்டாவதாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் முன்னுக்கும் பின்னுக்கும் போய்க்கொண்டு இருக்கிறது.

ஆனால் எப்படியாவது டிஆர்பி ரேட்டிங்கில் அதிகமான புள்ளிகளை பெற்று சன் டிவி பக்கத்தில் நெருங்கி விட வேண்டும் என்பதற்காக ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களில் மட்டமான காட்சிகளை வைத்திருக்கிறார்கள். அதிலும் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிதாக தொடங்கிய நினைத்தேன் வந்தாய் சீரியலில் சில காட்சிகள் கண் கொண்டு பார்க்க முடியாது என்பதற்கு ஏற்ப மோசமாக போய்க்கொண்டிருக்கிறது.

அதாவது இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் கணேஷ் வெங்கட்ராமன், டாக்டர் எழில் கேரக்டரில் நடித்து வருகிறார். இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறது. இவருடைய மனைவி இந்துமதி ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். அதன் பிறகு அந்த குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக சுடர் என்கிற அபிராமி நடித்து வருகிறார். அபிராமி பிக் பாஸ் சீசன் 3 மூலம் மிகவும் பிரபலமானார்.

ஆனாலும் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சீரியலில் நடிக்க போய்விட்டார். அப்படி கெஸ்ட் ரோலில் நடித்த சீரியல் தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா. இதில் வீராவுக்கு தோழியாக நடித்தார். அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில் சுடர் கேரக்டருக்கு மாறிவிட்டார். அப்படி சுடர் கேரக்டருக்கு வந்த அபிராமி சந்தர்ப்ப சூழ்நிலையில் எழிலுடன் கல்யாணம் ஆகிவிட்டது.

இருந்தாலும் எழிலுக்கு முதல் மனைவி மீது தான் அதிக அன்பும் பாசமும் இருப்பதால் சுடரை மனைவியாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சுடர், எழில் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும் என்பதற்காக எல்லை மீறி ரொமான்டிக் காட்சிகளுடன் நடித்து வருகிறார்.

இது ஒரு நாடகமாக இருந்தாலும் இந்த அளவுக்கு மோசமாக அபிராமி நடிக்க துணிந்து விட்டார் என்று தொடர்ந்து எதிர்மறையான கமெண்ட்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் மோசமாக நடித்த அபிராமியின் எல்லை மீறும் காட்சிகள் தற்போது ட்ரோல் பண்ணும் அளவிற்கு சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

Trending News