புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பிக்பாஸ் மாயாவுக்கு வந்த திடீர் வலிப்பு.. உலக அழகியை அசிங்கப்படுத்திய உள்ளூர் கிழவி

Biggboss 7: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பல சம்பவங்கள் நடந்தது. ஆனால் மாயா செய்த ஒரு விஷயம் தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் உலக அழகியை அசிங்கப்படுத்திய இந்த உள்ளூர் கிழவியை ஆடியன்ஸ் ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

அதன்படி இந்த வாரம் நடந்த டான்ஸ் மாரத்தான் போட்டியில் மாயா ஜீன்ஸ் பட ஐஸ்வர்யா ராயாக மாறியிருந்தார். அதில் ஐயர் பாஷை பேசும் வைஷ்ணவியின் கதாபாத்திரத்தை தான் அவர் எடுத்திருந்தார். ஆனால் இது என்ன உலக அழகிக்கு வந்த சோதனை? என்பது போல் இருந்தது அவருடைய பர்பாமன்ஸ்.

எதற்கெடுத்தாலும் பாட்டி என ஒப்பாரி வைப்பதிலிருந்து கடலை மாவை முகத்தில் பூசிக்கொண்டு திரிந்தது வரை அனைத்துமே கொஞ்சம் ஓவராக தான் இருந்தது. அதில் அவர் ஆடிய காக்கா வலிப்பு டான்ஸ் இப்போது வைரலாகி வருகிறது.

Also read: பிக் பாஸில் தொடரும் டபுள் எவிக்சன் .. அனன்யாவை தொடர்ந்து 75 நாள் கழித்து வெளியேரும் டம்மி பீஸ்

ஐஸ்வர்யா ராய் மாதிரி ஆட சொன்னால் ஐஸ் விக்கிற ஆயா மாதிரி அவர் ஆடி இருந்தார். இதை பார்த்த உலக அழகி ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும் முதல் பாதியில் மாயா ஓரளவுக்கு சிறப்பாகவே ஆடிக் கொண்டிருந்தார். இரண்டாவது எலும்புக்கூடு வரும் காட்சியை பிரதிபலிக்கிறேன் என்ற பெயரில் அவர் போட்ட ஆட்டத்தை பார்க்கும் போது தூக்கி வாரி போட்டது.

அந்த அளவுக்கு யாரு சாமி இவ? அப்படின்னு கேக்குற அளவுக்கு மாயா தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தார். பிக் பாஸ் ஒரு பாட்டுக்கு ஆட சொன்னால் மாயா அவர் பாட்டுக்கு ஆடினது ஒரு பக்கம் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க வைத்தது. ஆனால் இதை பார்த்தால் ஐஸ்வர்யா ராய் நிச்சயம் நொந்து நூலாகி விடுவார்.

மாயாவுக்கு வந்த திடீர் வலிப்பு

maya-dance
maya-dance

அப்படித்தான் மாயா காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றிக் கொண்டிருந்தார். ஆனால் நல்ல வேளையாக விஜய் டிவியில் வரும் ஒரு மணி நேர எபிசோடில் இந்த காட்சி ஒளிபரப்பாகவில்லை. குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனை கருத்தில் கொண்டு சேனல் இதை செய்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

Also read: ஆண்டவர நம்பி பிரயோஜனம் இல்ல.. கார்த்தியிடம் சரண்டரான வினோத்

Trending News