வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வினுஷா மாதரி இந்த 4 பேரை கொச்சையாக பேசிய நிக்சன்.. ஒரே நாளில் உத்தமன் ஆன காஜி தலைவன்

Bigg Boss Nixen and Vinusha: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை பொறுத்தவரை நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற பாகுபாடுக்கு அப்பாற்பட்ட விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. அதாவது என்னதான் நல்லவர்களாக இருந்தாலும், அந்த வீட்டிற்குள் போய்விட்டால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஒரு விபரீதம் காத்துக் கொண்டிருக்கிறது.

இதில் ஒரு சிலர் மட்டும் தப்பித்து இருக்கிறார்கள். மற்றபடி கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவருமே வெளியில் தவறாகத்தான் தெரிகிறார்கள். இந்த விஷயத்தில் தற்போது நிக்சனும் மாட்டிக் கொண்டார். என்ன தான் போட்டியாளர்களில் ஒருவராக இவர் இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்தே இப்பொழுது வரை இவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே தான் இருக்கிறது.

அதற்கு காரணம் இவருடைய உண்மையான கேரக்டர் என்று இவருடைய முகத்திரையை காட்டியதால். அந்த விதத்தில் வினுஷாவை அக்கா என்று கூப்பிட்டு பாசத்தைக் காட்டிய நிக்சன் பின்னாடியே அவரின் உடல் தோற்றத்தை பற்றி கிண்டல் அடித்து அவதூறாக பேசியிருக்கிறார். பார்க்கவே வேலைக்காரி மாதிரி இருக்கிறார் என்று கொச்சையாக பேசி இருந்தார்.

Also read: அர்ச்சனாவின் முகமூடியை கிழித்தெறியும் லீலையின் மன்னன்.. சொதப்பலாக வரும் பிக் பாஸ் சீசன் 7

அடுத்ததாக ஐஸுவிடம் எல்லை மீறி சில விஷயங்களை செய்தது. அத்துடன் அவரை அடிக்கடி தொந்தரவு செய்தது. பிரெண்ட்ஸ் என்கிற பெயரில் டார்ச்சர் கொடுத்தார். இதனால் இவரிடம் மாட்டிக் கொண்ட ஐசு கடைசியில் பலிக்காடாக வெளியே போய்விட்டார். இவருக்கு அடுத்ததாக அர்ச்சனாவிடம் ரொம்பவே வன்மமாக பேசி இருக்கிறார்.

அதாவது அர்ச்சனாவை பற்றி இதெல்லாம் ஒரு பொண்ணா கள்ளிப்பால் ஊற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று நிக்சன் மிகவும் கொடுமையான வார்த்தைகளை வைத்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது கருமம், நீ எல்லாம் ஒரு பொண்ணா, சொருகிடுவேன் என்று மிரட்டும்படி தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வீட்டில் இருக்கும் அனைத்துப் போட்டியாளர்கள் முன்னணியில் அர்ச்சனாவை அவமானப்படுத்தி இருக்கிறார்.

இதே மாதிரி அக்ஷவிடம் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தில் நீ எல்லாம் ஒரு பொண்ணா என்கிற மாதிரி பேசி சண்டை போட்டிருக்கிறார். இப்படி பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பெண்களை கொச்சையாக பேசிவிட்டு தற்போது ஒரே நாளில் நான் மட்டும் தான் உத்தமன் என்கிற மாதிரி பேசிட்டு வரும் காஜி தலைவனை பார்த்தாலே கடுப்பாக இருக்கிறது. இவருக்குத் தான் முதலில் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று மக்கள் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Also read: தளபதி 68 பட வாய்ப்பு பெற்ற பிக் பாஸ் பிரபலம்.. 18 வருடத்திற்கு பின் இணையும் கூட்டணி

Trending News