வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக் பாஸ் கோடி கோடியாய் கொட்டியும் ஒரு பிரயோஜனமும் இல்ல.. கேபிஒய் தீனா செய்யப் போகும் தரமான சம்பவம்

KPY Dheena: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டால் எப்படியாவது பிரபலமாகி விடலாம் என்ற நப்பாசையில் அதில் பங்கேற்கின்றனர். ஆனால் அந்தப் போட்டியாளர்கள் எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆள் அட்ரஸ் தெரியாமல் காணாமல் போய்விடுகின்றனர். சொல்லப்போனால் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு இருந்த அளவுக்கு கூட சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை.

அது போதாது என்று தங்களுடைய பெயரையும் நாரடித்து கொள்கின்றனர். கோடி கோடியாய் செலவழித்து அந்த நிகழ்ச்சியை எடுத்தாலும் பங்கேற்கும் பிரபலங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனால் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் சினிமா வாய்ப்பு கிடைத்து உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். அதிலும் கேபிஒய் தீனா தற்போது தரமான சம்பவத்தை செய்யப் போகிறார்.

Also Read: 40 படங்களில் நடித்த மும்தாஜின் மொத்த சொத்து மதிப்பு.. கவர்ச்சிக்காகவே கல்லா கட்டிய நடிகை

சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் இவர்களின் வரிசையில் தற்போது இளம் காமெடி நடிகர்களாக இருக்கும் கேபிஒய் புகழ் பாலா, தங்கதுரை, தீனா போன்றோர் டாப் நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகர்களாக கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் தீனா ‘கைதி’ படத்தில் கார்த்தி உடன் படம் முழுக்க பயணித்து தன்னை ஒரு நடிகராக நிரூபித்தார்.

இவர் காமெடி மட்டுமல்ல அவருடைய நிதானமான நடிப்பு ரசிகர்களை மிகவும் ஈர்த்ததால் தொடர்ந்து பல பட வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல கைதி படத்தின் படப்பிடிப்பின் போது படத்தின் இயக்குனர் லோகேஷுக்கும் இவருக்கும் அண்ணன் தம்பி போன்ற உறவு ஏற்பட்டிருக்கிறது.

Also Read: சுயபுத்தி இல்லாமல் புகார் கொடுத்த ரட்சிதா.. கிடுக்கு பிடி போட்டு உண்மையை வர வைத்த போலீஸ்

இதனால் அவருக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்த லோகேஷ், தற்போது தீனாவை இயக்குனராக அவதாரம் எடுக்க வைத்திருக்கின்றார். இதற்கு லோகேஷும் முழு உதவியை செய்ய தயாராக இருக்கிறார். சீக்கிரம் தீனா இயக்கக்கூடிய படத்தின் முழு அப்டேட்டும் வெளிவர போகிறது.

என்னதான் விஜய் டிவியில் கேபிஒய் என்பது காமெடி நிகழ்ச்சியாக இருந்தாலும், இதன் மூலம்தான் பல பிரபலங்கள் உருவெடுக்கின்றனர். ஆனால் பிக் பாஸ் மூலம் பேமஸ் ஆகலாம் என்ற எண்ணத்தில் வருபவர்கள் தங்களுடைய வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர் என்பது தற்போது திட்டவட்டமாக தெரிகிறது.

Also Read: ஜல்லிக்கட்டு ஜூலியை போல பிக்பாஸில் மீண்டும் ஒரு சிங்கப்பெண்.. இப்பவே ரூட்டை கிளியர் பண்ணிய கமல்

Trending News