வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்.. அனன்யா விஷயத்தில் பிக் பாஸ் செய்தது சரியா?

BB7 Tamil: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 75 வது நாளை எட்டி இருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் 70 நாட்களைக் கடந்த பிறகு வாரத்தின் நடுவில் திடீரென ஒரு எவிக்சன் நடக்கும். இப்படி வெளியில் செல்லும் போட்டியாளர்களுக்கு சிறப்பாக வழி அனுப்புவது என்பது நடக்காது. அந்த வாரத்தின் இறுதியில் கமலஹாசன் இவர்களை அழைத்துப் பேசலாம், பேசாமலும் போகலாம்.

அப்படித்தான் இந்த ஏழாவது சீசனில் நேற்று மிட் வீக் எவிக்சன் நடைபெற்றது. இதில் அனன்யா ராவ் வெளியேறி இருக்கிறார். மாடல் நடிகையான அனன்யா ராவ் இந்த சீசனில் கலந்து கொண்ட போது முதல் வாரத்தில் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அனன்யா ராவ் பற்றி மக்களுக்கு எந்த புரிதலும் ஏற்படுவதற்கு முன்னரே அவரை வெளியேற்றி விட்டதாக பார்வையாளர்களிடையே குற்றச்சாட்டு இருந்தது.

அதன்பின்னர் பூகம்பம் டாஸ்கின் மூலம் அனன்யா ராவ் மீண்டும் உள்ளே வந்தார். அவர் இத்தனை வாரம் வீட்டுக்குள் இருக்கிறாரா, இல்லையா என்பதே பார்வையாளர்களுக்கு சந்தேகமாக இருக்கும் அளவுக்கு அமைதியாகத்தான் இருந்தார். பூகம்பம் டாஸ்கின் மூலம் உள்ளே வந்த போட்டியாளர் வீட்டிற்குள் எந்த பூகம்பத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தது பிக் பாஸ் ஆடியன்ஸ்களுக்கு வெறுப்பாகத்தான் இருந்தது.

Also Read:மணியை பிரேக் அப் செய்ய இதுதான் காரணம்.. ரவீனாவால், காதலுக்கு குட்பை சொன்ன நிஜ காதலி

இருந்தாலும் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தவர்கள் மற்றும் விஜய் வர்மா வெளியில் ஆட்டத்தை பார்த்துவிட்டு அதன் மூலம் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை டார்கெட் செய்து வந்தார்கள். அப்படி இருக்கும் பொழுது அனன்யா ராவ் தனக்கு சாதகமாக எந்த ஒரு போட்டியாளரின் நெகட்டிவ் விஷயத்தையும் பயன்படுத்தாமல் இருந்தது ரசிகர்களுக்கு அவர் மீது நல்ல எண்ணத்தை கொடுத்தது.

மக்களை கவர்ந்த அனன்யா ராவ்

மேலும் இந்த வாரம் நடைபெற்ற டான்ஸ் மாரத்தான் நிகழ்ச்சியில் அனன்யாவின் பங்கேற்பு பிக் பாஸ் பார்வையாளர்களை கவர்ந்தது. இப்படியான சூழ்நிலையில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டு இருப்பது எல்லோருக்கும் ஏமாற்றமாக இருக்கிறது. வீட்டை விட்டு வெளியேற துடித்த கூழ் ல் சுரேசை அனுப்பிவிட்டு இவரை உள்ளே வைத்திருக்கலாம் என ஆடியன்ஸ்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பித்தபோது அனன்யா ராவ் தான் வெளியேற்றப்பட்டார். அதேபோல் மிட் வீக் எவிக்ஷனிலும் அவர்தான் முதலில் வெளியேற்றப்பட்டிருக்கிறார். பிக் பாஸ் தனக்கு பிடித்த போட்டியாளர்கள் யாரையும் இந்த பிராசஸில் வெளியே அனுப்பி விடக் கூடாது என்பதற்காகத்தான் அனன்யா ராவை பூகம்பம் டாஸ்க் மூலம் மீண்டும் உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள் என தற்போது சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் பார்வையாளர்கள் பேசி வருகிறார்கள்.

Also Read:அந்தர் பல்டி அடித்த அர்ச்சனா.. வாய் அடைத்துப் போன பூர்ணிமா, வயிற்று எரிச்சலில் கத்தும் மாயா

Trending News