வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

யோக்கியன் மாதிரி கவினை அடிச்சீங்க பிரதீப், இந்த லிப்லாக் சீன் எடுக்க 8 டேக்கா.? காட்டுத் தீயாய் வைரலாகும் புகைப்படம்

Bigg Boss Pradeep: பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்று இப்போது கோலிவுட்டில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நடிகர் தான் கவின். பிக் பாஸ் வீட்டில் கவின் லாஸ்லியாவுடன் கொஞ்சிக் குளவி கொண்டிருக்கும்போது, அவருடைய வீட்டில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நெருங்கிய நண்பராக பிரதீப் வந்திருந்தார்.

லாஸ்லியாவின் பின்னாடியே சுற்றிக்கொண்டு கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்தவில்லை என்று, அவரை அனைவரின் முன்னிலையிலும் பிரதீப் ஓங்கி அறைந்து விட்டார். அப்படிப்பட்ட இவர் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியளராக நுழைந்துள்ளார் என தெரிந்ததும் இவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது.

Also Read: பிக் பாஸ் மேடையை அசிங்கப்படுத்திய போட்டியாளர்.. கவினை அடிச்ச அளவுக்கு உனக்கு அறிவு பத்தல தம்பி

ஆனால் சீசன் 3ல் பெரிய யோக்கியன் மாதிரி கவினை அறைந்த பிரதீப் கதாநாயகனாக நடித்த வாழ் படத்தில் கதாநாயகியுடன் ஒரு லிப் லாக் காட்சி இருந்திருக்கு. ரொம்ப சர்வ சாதாரணமாக நடிக்க வேண்டிய இந்த காட்சியில் பிரதீப் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காமல் 8 முறை ரீ டேக் எடுத்து வைத்திருக்கிறார்.

அருவி பட இயக்குனர் அருண் பிரபுவின் 2வது படம் தான் வாழ். படத்தில் கதாநாயகனான பிரதீப் வாழ்க்கையில் கதாநாயகி டிஜே பானு குறிக்கிட்டு பயணிக்கும் போது அவருடைய வாழ்க்கையை திசை மாறி போகிறது. இந்த பயணத்தின் முடிவில் என்னவாகிறது என்பதுதான் கதை. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் வாழ்க்கையை மாற்றுகிறார்கள் இதுதான் வாழ் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

Also Read: 7 பேரில் இந்த வாரம் வெளியேறப் போகும் பிக் பாஸ் போட்டியாளர்.. சுத்தி சுத்தி செய்யும் மட்டமான வேலை

இதில் இடம்பெற்ற லிப் லாக் காட்சியில் டிஜே பானுவிடம் பிரதீப் அத்து மீறி இருக்கிறார். அவர் நினைத்திருந்தால் ஒரு சில டேக்கில் அந்த லிப் லாக் காட்சியில் சரியாக நடந்திருக்க முடியும். ஆனால் பானு உடன் நெருக்கமாக வேண்டும் என்பதற்காகவே அசிங்கமாக பிளான் போட்டு 8 முறை டேக் வாங்கினார். இந்த விஷயம் புகைப்படத்துடன் இப்போது சோசியல் மீடியாவில் அம்பலமாகிறது.

இதுக்கு முன்னாடி கவினை கரக்சன் செய்த பிரதீப் மீது ஒரு தனி மரியாதையே இருந்துச்சு. ஆனா வாழ் படத்தில் அவர் செஞ்ச இந்த மோசமான செயல் இப்போது இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது. தற்போது நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் பிரதீப், பிக் பாஸ் வீட்டிலும் அவசர குடுக்கை போல் நிறைய வேலைகளை செய்கிறார். பிரதீப்பை குறித்து இதுவரை தெரியாத ஒவ்வொரு விஷயமும் பூதாகரமாக வெளிவருவதால் அவரை ரொம்ப நாள் ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வைக்க விரும்பவில்லை.

பிரதீப்-பின் லிப்லாக் புகைப்படம்!

pradeep-cinemapettai
pradeep-cinemapettai

Also Read: பத்த வச்ச பிக்பாஸ், பற்றி எரியும் வீடு.. வந்த வேலையை சிறப்பா ஆரம்பித்த கவின் கூட்டாளி

Trending News