செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அவன காலி செய்ய வேண்டிய நேரத்துல பண்ணுவேன்.. புகழ் போதைக்கு அடிமையான பிக்பாஸ் ராஜமாதா

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது கர்ண கொடூரமாக சென்றாலும் ஆடியன்ஸ் அதை விடாமல் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்கள் நேரத்திற்கு தகுந்தாற் போல் கட்சி மாறி வருவதுதான். இது இப்போது மீடியாவில் பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதில் பிக்பாஸ் ராஜமாதா என்று அழைக்கப்படும் விசித்ராவும் விதிவிலக்கல்ல. ஏனென்றால் கடந்த சில வாரங்களாகவே அவர் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் கைதட்டலை வாரி வழங்கி வருகின்றனர். அதனாலேயே அவர் இப்போதெல்லாம் தனக்கு சாதகமான விஷயங்களை கமல் பேசும்போது முன்வைக்கிறார்.

அதிலும் இந்த வாரம் வேண்டுமென்றே நிக்சன் சார் என இரண்டு முறை கூறி அந்த விவகாரத்தை கையில் எடுத்ததை நாம் பார்த்தோம். இப்படி அவருடைய கேம் பிளான் சரியான நேரத்தில் இறக்கப்பட்டு வருகிறது. அதிலும் தன்னுடைய யுக்தியை அவர் யாரிடமும் பகிர்ந்து கொள்வது கிடையாது.

Also read: அர்ச்சனாவின் கேம்க்கு பின்னாடி குருநாதரின் மாஸ்டர் பிளான்.. மைண்ட் வாய்ஸ்ல உளறிய தினேஷ், மணி

ஆனால் தற்போது மாயாவிடம் அவர் கூறிய ஒரு விஷயம் விசித்ரா புகழ் போதைக்கு அடிமையாகி விட்டாரோ என நினைக்க வைத்திருக்கிறது. அதாவது இந்த வாரம் அவர் தான் நிக்சனை நாமினேட் செய்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர். விஷ்ணுவிடம் ஸ்டார்களை கொடுக்கும் போது கூட இதை கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரோ நிக்சனை நாமினேட் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டார். ஏனென்றால் இதன் மூலம் அவருக்கு இருக்கும் நல்ல பெயர் கெட்டுப் போய்விடும் என்ற பயம் தான். அதைத்தான் அவர் மாயாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் நிக்சனை எப்படியும் காலி செய்ய வேண்டிய நேரத்தில் செய்து விடுவார் என்பது தான் உண்மை. ஆக மொத்தம் இந்த புகழ் போதை யாரை தான் விட்டது.

Also read: மிக்சர் விக்ரம் தான் தப்பிச்சான்னு பாத்தா, மிக்சர் குடோனும் தப்பிக்கிது.. நல்லா உருட்டும் பிக்பாஸ் நாமினேஷன்

Trending News