திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிக் பாஸில் உங்களை காப்பாற்ற நாங்க இருக்கோம்.. ஒரே நைட்டில் ட்ரெண்டாகும் ராஜு பாய்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே போட்டிகள் நடைபெற உள்ளது. கடுமையாக நடைபெற உள்ள இந்த போட்டிகளின் முடிவில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வார்கள்.

இதற்காக போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த டிக்கெட்டை வெல்ல யார் தகுதியானவர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அதில் பவானி, ராஜுவின் பெயரை கூறி அவர் இந்த டிக்கெட்டை பெறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று கூறினார்.

மேலும் ராஜூ மக்கள் தன்னை எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என்று அதிக நம்பிக்கையில் இருக்கிறார் என்றும் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜு சும்மா ஒருத்தவங்கள மக்கள் எப்படி ஓட்டு போட்டு காப்பாத்துவாங்க அதற்கு நாம ஏதாவது செய்யணும். அதனால் இந்த டிக்கெட்டை பெறுவதற்கு நான் என்னால் முடிந்த முழு முயற்சியையும் கொடுப்பேன் என்று சொன்னார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே ராஜுவுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்த பின்னர் ராஜுவின் இயல்பான நடவடிக்கையும், நகைச்சுவையான பேச்சும் மக்களை ரொம்பவே கவர்ந்தது. அதன் காரணமாகவே அவர் ஒவ்வொரு வாரமும் மக்களால் முதலாவதாக காப்பாற்றப்பட்டு வருகிறார்.

பிக் பாஸ் இறுதி நாள் நெருங்கும் இந்த நிலையில் மக்கள் அனைவரும் ராஜு இந்த டைட்டிலை பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். மேலும் ராஜுவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் ராஜு தற்போது ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுநாள்வரை ராஜு கடந்து வந்த பாதைகளை நினைவு கூறும் மக்கள் அவர் இந்த டிக்கெட்டை பெறாவிட்டாலும் நிச்சயம் இறுதிப்போட்டிக்கு போவார் என்று கமெண்ட் கூறுகின்றனர். ராஜீவை இதற்கு தகுதி இல்லாதவர் என்று கூறிய பவானி ரெட்டியின் கருத்துக்கு ராஜுவின் ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Trending News