வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக்பாஸ் சீசன்-6 முதல் பைனலிஸ்ட் இவர் தான்.. கொண்டாடும் சோசியல் மீடியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் தற்போது ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் நடிகை ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

குழந்தைத்தனமான அவருடைய பேச்சும், நடவடிக்கையும் அவருக்கென தனி ஆர்மி தொடங்கும் அளவுக்கு ரசிகர்களை உருவாக்கியது. அதன் பிறகு வந்த எத்தனையோ போட்டியாளர்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜிபி முத்து ஓவியாவையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு இருக்கிறார்.

Also read:இதுவரை பிக்பாஸ் டைட்டிலை வென்ற 5 பிரபலங்கள்.. இப்ப என்ன செய்றாங்க தெரியுமா?

அந்த அளவுக்கு அவர் தற்போது சோசியல் மீடியாவில் கொண்டாடப்பட்டு வருகிறார் வெகுளித்தனமான அவருடைய பேச்சும், நகைச்சுவையும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. எதார்த்தமாக அவர் பேசுவதே பயங்கர காமெடியாக இருக்கிறது.

அதிலும் நேற்றைய எபிசோடில் அவர் கொடுத்த அலப்பறை பயங்கர கலக்கலாக இருந்தது. இதனாலேயே அவருக்கு ஆதரவாக தற்போது பல ரசிகர்களும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் யாராவது ஒருவர் ஜி பி முத்துவை கலாய்த்து விட்டாலே அவருடைய ஆர்மியினர் பொங்கி விடுகின்றனர்.

Also read:பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மர்மம்.. அலறியடித்து வெளியே ஓடிய பிரபலம்

அதனாலேயே இவர் பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை இருப்பார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஜிபி முத்து நிச்சயமாக பைனல் போட்டிக்கு செல்லும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இன்னும் நாட்கள் செல்ல செல்ல அவருக்கு இருக்கும் ஆதரவு பெருகும் என்று தற்போது அவர் குறித்து வெளிவரும் கமெண்ட்களிலேயே தெரிகிறது.

யூடியூப் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வேற லெவலுக்கு செல்வார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஜிபி முத்து இல்லாத ஒரு ப்ரோமோ கூட வெளிவருவதில்லை. அந்த அளவுக்கு இவர் விஜய் டிவியின் டிஆர்பிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்.

Also read:ஓவியாவிற்கு டஃப் கொடுக்கும் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. அறிமுகமாவதற்கு முன்பே ஆர்மியா?

Trending News