புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பிக்பாஸ் சீசன் 6 ஆண் போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம்.. முதல் இடத்தில் இருக்கும் பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை கலக்கிக் கொண்டிருக்கும் ஒரே போட்டியாளர் ஜி பி முத்து தான். அதனாலேயே இந்த சீசனின் டிஆர்பி அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் நமக்கு தெரியாத பல புது முகங்கள் இருந்தாலும் இப்போது ஒவ்வொருவரை பற்றியும் ரசிகர்களால் கணிக்க முடிகிறது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆண் போட்டியாளர்களுக்கு விஜய் டிவி கொடுத்த ஒரு நாள் சம்பளம் என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதைப்பற்றி இங்கு விரிவாக காண்போம்.

Also read:மன்மத குஞ்சாக மாறிவரும் அசல்.. பெண்களை தடவி பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்ட நெட்டிசன்கள்

விஜே கதிரவன் சன் டிவி உட்பட பல சேனல்களில் தொகுப்பாளராக இருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக இருக்கிறார். அந்த வகையில் இவருக்கு ஒரு நாள் சம்பளமாக 11 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை கிடைக்கிறது.

அமுதவாணன் விஜய் டிவியின் பிரபலமான இவர் பிக் பாஸ் வீட்டிலும் ஏதாவது காமெடி கலாட்டாக்கள் செய்து கொண்டிருக்கிறார். அதுவே போட்டியாளர்களையும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இவருக்கு விஜய் டிவி ஒருநாள் சம்பளமாக 23 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை கொடுக்கிறது.

விக்ரமன் பத்திரிக்கையாளர் மற்றும் சிறந்த பேச்சாளராக இருக்கும் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார். ஆனாலும் இன்னும் பிக் பாஸ் வீட்டில் இவருடைய பேச்சு திறமை வெளிப்படவில்லை. அந்த வகையில் இவருக்கு ஒருநாள் சம்பளமாக 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டுள்ளது.

ஏடிகே பாடகராக இருக்கும் இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒருநாள் சம்பளமாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டு வருகிறது.

Also read:பிக் பாஸ் சீசன் 6 முதல் தலைவர் இவர்தான்.. அப்போ தரமான சம்பவம் இருக்கு

ராம் ராமசாமி பிக்பாஸ் வீட்டில் மிகவும் அமைதியாக வலம் வரும் இவருக்கு ஒரு நாள் சம்பளமாக 11 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டு வருகிறது. பார்ப்பதற்கு ஹீரோ போன்று இருக்கும் இவர் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் ஈர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிகண்டன் விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவருக்கு ஒரு நாள் சம்பளமாக 11 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டு வருகிறது.

ராபர்ட் நடன இயக்குனராக இருக்கும் இவருக்கு விஜய் டிவி ஒரு நாளைக்கு மட்டுமே 11 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்து வருகிறாராம். அந்த வகையில் மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு அதிகபட்ச சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது.

அசீம் விஜய் டிவியின் சீரியல்களில் நடித்து இருக்கும் இவர் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமானவர். அந்த வகையில் இவருக்கு ஒரு நாள் சம்பளமாக 21 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டு வருகிறது.

ஜி பி முத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வரும் இவருக்கு விஜய் டிவி ஒரு நாள் சம்பளமாக 11 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கொடுத்துள்ளது. பலமுறை முயற்சி செய்யப்பட்டு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இவர் இறுதி போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசல் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருக்கும் இவருக்கு விஜய் டிவி ஒரு நாளைக்கு 11 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கொடுக்கிறது.

Also read:பிக்பாஸ்- 6 முதல்வார நாமினேஷன் லிஸ்ட் ரெடி.. வெளியேறும் சிடு மூஞ்சி போட்டியாளர்

Trending News