திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

முதல் நாளே பத்த வச்சிட்டியே பரட்டை பிக் பாஸ்.. 2வது வீட்டிற்கு துரத்தி விடப்பட்ட 6 போட்டியாளர்கள்

Bigg Boss Season 7 Promo: பிக் பாஸ் சீசன் 7 நேற்று தொடங்கியிருக்கும் நிலையில், முதல் நாளிலேயே ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் வழி வகுத்து விட்டது விஜய் டிவி. கூல் சுரேஷ் உள்ளே நுழைந்தவுடன் அவரிடம் கேப்டன் பதவி ஆசையை காட்டி மொத்தமாக மோசம் செய்ததோடு, கூல் சுரேஷ் அராத்தி பூர்ணிமா கேட்கும் பொழுது கேப்டன் பதவியை விட்டுக் கொடுக்காமல் ரவீனாவுக்கு விட்டுக் கொடுத்தது சர்ச்சையாக இருந்தது.

அந்த கேப்டன் பதவி கடைசியாக நடன கலைஞர் விஜய் வர்மாவுக்கு கிடைத்தது. முதல் வாரத்திலேயே கேப்டன் ஆகிவிட்டோம் என்ற சந்தோஷம் நீடிப்பதற்கு முன்பே இரண்டாவது வீட்டிற்கு யாரை அனுப்ப வேண்டும் என்று நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லி, கொளுத்தி போட்டு விட்டார் பிக் பாஸ். அதிலும் ஆறு பேரை தேர்ந்தெடுக்க அவர் கொடுத்த ரூல்ஸ் இன்னும் மோசம்.

Also Read:பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள்.. அட இவங்க ரெண்டு பேரும் நிஜமான காதல் ஜோடியா!

18 போட்டியாளர்களில் எந்த 6 பேர் விஜய் வர்மாவை இம்ப்ரஸ் செய்யவில்லையோ அவர்களை இரண்டாவது வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் டாஸ்க். ஒருவரை சந்தித்து சில மணி நேரங்களிலேயே இப்படி ஒரு முடிவு எடுப்பது என்பது ரொம்பவும் கஷ்டம் தான். அதுவும் மீடியா அறிமுகம் அவ்வளவாக இல்லாத விஜய்க்கு இப்படி ஒரு டாஸ் கொடுத்திருப்பது அநியாயத்தின் உச்சம்.

விஜய் வர்மாவும் கொடுத்த டாஸ்கை பக்காவாக முடித்து விட்டார். தன்னை அவ்வளவாக இம்ப்ரஸ் செய்யாத ஆறு பேரை அவர் செலக்ட் செய்து இரண்டாவது வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார். அந்த வகையில் ஐஷு, பவா செல்லதுரை, நிக்ஸன், ரவீனா, அனன்யா ராவ், வினுஷா தேவி ஆகியோர் தங்களுடைய பெட்டிகளை எடுத்துக் கொண்டு இரண்டாவது வீட்டிற்கு செல்கிறார்கள்.

Also Read:விஜய் டிவியை குத்தகைக்கு எடுத்த பிக் பாஸ்.. வேலியில் போற ஓணானை வேட்டியில் எடுத்து விடும் கூல் சுரேஷ்

அதோடு மட்டும் விடாமல் இந்த இரண்டாவது வீட்டிற்கு செல்பவர்கள் வீட்டை விட்டு எந்த காரணத்திற்காகவும் வெளியில் வரக்கூடாது என்றும், இந்த வீட்டில் இருக்கும் வரை அவர்களிடம் பிக் பாஸ் பேச போவதில்லை என்றும் சொல்லி இருக்கிறார். என்ட்ரியான இரண்டாவது நாளிலேயே இப்படி ஒரு சூழ்நிலையை சந்திக்கும் அந்த ஆறு கண்டஸ்டன்டும் திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று உலக நாயகன் கமலஹாசன் இரண்டு வீடுகளையும் சுற்றி காட்டும் பொழுதே, வீடுதான் இரண்டு வாசல் மற்றும் கிச்சன் ஒன்றுதான் என சொல்லி இருந்தார். கண்டிப்பாக இந்த ஒரு வாசல் மற்றும் ஒரு கிச்சனால் பூகம்பம் கிளம்பும் என நன்றாகவே தெரிகிறது. நிகழ்ச்சிக்கான விறுவிறுப்பை கூட்ட முதல் நாளிலேயே பற்ற வைத்திருக்கிறார் பிக் பாஸ்.

Also Read:குருநாதா இத்தனை நாளா எங்க போனீங்க.. குணசேகரனுக்கு பதிலாக சரவெடியாக வெடிக்க போகும் பட்டாசு நடிகர்

Trending News