திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

ஹீரோயினாக களமிறங்கும் பிக் பாஸ் சீசன் 7 நடிகை.. கன்டென்ட் கொடுத்தது வீண் போகல

Bigg Boss Season 7 : விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்றாலே மற்ற தொலைக்காட்சிகள் மிகுந்த பீதியடைவார்கள். ஏனென்றால் பிக்பாஸ் காலகட்டத்தில் எப்போதுமே நம்பர் ஒன் டிஆர்பியை விஜய் டிவி தான் பிடிக்கும்.

அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் வெள்ளி திரையில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் சர்ச்சையான நடிகை ஒருவர் அக்கடதேச படத்தில் ஹீரோயினாக களம் இறங்குகிறார்.

ஹீரோயினாக களமிறங்கும் பிக் பாஸ் மாயா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் மாயா கிருஷ்ணன். இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் இவரும் பூர்ணிமாவும் இந்நிகழ்ச்சிக்கு எக்கச்சக்க கன்டென்டுகளை வாரி வழங்கியிருந்தனர்.

இதன் மூலம் கடந்த சீசனின் டிஆர்பியும் உச்சத்தை தொட்டது. அதேபோல் இவர்கள் இருவருமே கன்டென்ட் கொடுத்த நிலையில் அதற்கு பலனாக இப்போது இருவருமே ஹீரோயினாக வெள்ளித் திரையில் ஜொலிக்க இருக்கிறார்கள். அந்த வகையில் மாயா பைட்டர் ராஜா என்ற தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில் அந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. கிருஷ்ணா பிரசாந்த் இயக்கும் இந்த படத்தில் ராம்ஸ் என்பவருக்கு ஜோடியாக தான் மாயா நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

சினிமாவில் மாயா ஏற்கனவே துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் முதல்முறையாக பிக் பாஸுக்கு பிறகு ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இந்தச் செய்தி மாயா ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

Trending News