வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

7 நாட்களுக்கு மட்டும் அன்ன பாரதி வாங்கிய மொத்த சம்பளம்.. கூப்பிட்டு அசிங்கப்படுத்திய விஜய் டிவி

Bigg Boss Season 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெறும் போட்டியாளர்களுள் மக்கள் அளிக்கும் போட்டி அடிப்படையில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார்.

அந்த வகையில் கடந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் இருந்தவர்களுள் அன்ன பாரதி அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்டார். இவர் ஒரு வாரத்திற்கு முன்புதான் என்ட்ரி கொடுத்த ஐந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்களின் ஒருவராக பிக் பாஸ் வீட்டில் நுழைந்தார்.

வந்த வேகத்திலேயே இப்படி அனுப்பிச்சிட்டீங்களே! என்று அன்ன பாரதி புலம்பும் வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். வந்த  முதல் வாரத்திலேயே ஐந்து போட்டியாளர்களையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி விட்டார்கள்.

Also read: 34 நாட்களில் பிரதீப் பிக் பாஸில் வாங்கிய சம்பளம்.. ரெட் கார்டு கொடுத்தும் லட்சங்களை வாரி இறைத்த விஜய் டிவி

அங்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு சமைத்து தரவேண்டிய வேலையையும், வீட்டு வேலையையும் கொடுத்து அவர்களை டாஸ்க் விளையாட விடாமல் கேமராவில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் அன்ன பாரதிக்கு சரியாக ஓட்டுக்கள் விழவில்லை.

பட்டிமன்ற பேச்சாளராக பிரபலமான இவர் பிக் பாஸ் வீட்டில் எந்த வித சுவாரசியமான சம்பவத்தையும் செய்யவில்லை. இவர் ஒரு நாளைக்கு ரூபாய் 20,000 சம்பளம் வாங்கி இருக்கிறார். மொத்தம் ஏழு நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தமைக்காக மொத்தமாக ரூபாய் 1,40,000 சம்பளமாக பெற்றிருக்கிறார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களுடன் ஒன்றாக பழகும் வாய்ப்பைக் கூட கொடுக்கவில்லை. வந்த வேகத்திலேயே வெளியே அனுப்பி விட்டனர். கூப்பிட்டு அசிங்க படுத்திட்டீங்களே! என்று விஜய் டிவியின் மீது அன்ன பாரதி செம கடுப்பில் இருக்கிறார்.

Also read: 5 வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம்.. அடேங்கப்பா! இதுக்கா இவ்வளவு அவமானம்

Trending News