செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

பிக்னிக்கா வந்தீங்க, சாப்ட்டு சாப்ட்டு தூங்கிட்டு இருக்கீங்க.? அடிமடியிலேயே கை வைத்த பிக்பாஸ்

Biggboss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். புதுப்புது வித்தியாசங்களை காட்டி வரும் இந்த ஷோ தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோ ஆடியன்ஸை கலகலக்க வைத்திருக்கிறது.

அதாவது போட்டியாளர்களுக்கு தற்போது கொஞ்சம் கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு போர்டில் பாலை உருட்டிவிட்டு அது கீழே வருவதற்குள் எதிர்ப்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பஸ்ஸில் கேமை சால்வ் செய்ய வேண்டும். இது பார்ப்பதற்கு சுலபமாக தெரிந்தாலும் கொஞ்சம் கடினம் தான்.

இதனால் திண்டாடி போகும் போட்டியாளர்களான ரவீனா, மணி, யுகேந்திரன் மூவரும் இறுதியில் தோல்வியை தழுவுகின்றனர். அதைத்தொடர்ந்து பிக்பாஸ், தோற்றவர்கள் வீட்டில் சமைக்கப்படும் எந்த உணவு பொருளையும் சாப்பிடக்கூடாது என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்.

இதை எதிர்பார்க்காத மூவரும் உறைந்து போகின்றனர். அதிலும் ரவீனா அப்ப எனக்கு பசிக்கும் இல்ல சாப்பிடக்கூடாதா என்று அழுகாத குறையாக கேட்கிறார். இது ஒரு புறம் இருக்க ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விஷப்பூச்சி மாயா தட்டு நிறைய சாப்பாடை போட்டுக்கொண்டு நம்பியார் போல் வில்லன் சிரிப்பு சிரிக்கிறார்.

இப்படியாக தற்போது வெளிவந்துள்ள இந்த ப்ரோமோ நிகழ்ச்சியை காணும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை என்ன செய்யலாம் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஏற்றார் போல் தற்போது அனைத்து சம்பவங்களும் சிறப்பாக நடந்திருக்கிறது.

இதனால் மற்ற போட்டியாளர்களும் ஒரு பயம் கலந்த மனநிலையில் தான் இருக்கின்றனர். அந்த வகையில் சாப்பிட்டு சாப்பிட்டு சும்மாவா சுத்திகிட்டு இருக்கீங்க இனிமேதான் என்னோட ஆட்டம் ஆரம்பிக்க போகுது என்று சொல்லும் வகையில் இருக்கிறது பிக்பாஸின் அதிரடி. ஆக மொத்தம் முதல் ப்ரோமோவே அமோகமாக தொடங்கிய நிலையில் அடுத்தடுத்த ட்விஸ்ட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் இப்போது காத்திருக்கின்றனர்.

Trending News