புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜோவிகாவை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகும் பிக் பாஸ்.. ரிவ்யூ ஷோவில் சீக்ரெட்டை உளறிய வனிதா

Bigg Boss Season 7 Next Twist: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 63 நாட்களைக் கடந்து பினாலேவை நோக்கி நகர்கிறது. இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டதிலிருந்து ஏகப்பட்ட திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருந்தவர்களுள் ஜோவிகா, கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்து எலிமினேட் செய்தது அதிர்ச்சியை அளித்தது.

ஆனால் எலிமினேட் செய்யப்பட்ட ஜோவிகா, இப்போது அவருடைய வீட்டிற்கு திரும்பவே இல்லை. ஏனென்றால் ஜோவிகாவை வைத்து தான் பிக் பாஸ் தன்னுடைய ஆட்டத்தை துவங்கப் போகிறார். அவரை சீக்ரெட் ரூமில் தங்க வைத்திருக்கின்றனர்.

இதனை நேற்றைய பிக் பாஸ் ரிவ்யூ ஷோவில் ஜோவிகாவின் அம்மா வத்திக்குச்சி வனிதா உளறிவிட்டார். இதன் மூலம் ஜோவிகா ரகசிய அறையில் இருப்பதை ரசிகர்களும் உறுதிப்படுத்தி விட்டனர். இதற்கு முந்தைய சீசன்களில் மூன்று போட்டியாளர்களை சீக்ரெட் ரூமில் வைத்திருந்தனர்.

Also Read: 2023ல் டிஆர்பி-யை கலக்கிய டாப் 6 சீரியல்.. மற்ற சேனல்களை வருஷம் முழுக்க திணறடித்த பிரபல சேனல்

பிக் பாஸ் சீசன் 7ல் ஏற்பட்டிருக்கும் அதிரடி ட்விஸ்ட்

முதல் சீசனில் சுஜா வருணி பின்பு இரண்டாவது சீசனில் வைஷ்ணவி, மூன்றாவது சீசனில் சேரன் உள்ளிட்டோர் தங்க வைக்கப்பட்டு திடீரென பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து ஆட்டத்தை சூடு பிடிக்க வைத்தனர்.

ஆனால் கடந்த மூன்று சீசன்களாக ரகசிய அறையில் யாரையும் தங்க வைக்கப்படாத நிலையில், தற்போது நடைபெறும் சீசன் 7ல் ஜோவிகாவை சீக்ரெட் ரூமில் தங்க வைத்து இன்னும் சில தினங்களில் அவரை மறுபடியும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப போகின்றனர். இதனால் மேலும் ஆட்டம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: யாருக்குமே தகுதி இல்லை.. கடைசியாக கும்பிடு போட்ட பிக் பாஸின் குருநாதர்

Trending News