ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பத்தி எறிய போகும் பிக் பாஸ் வீடு.. டிஆர்பிக்காக முரட்டு வில்லனை தூக்கிய விஜய் டிவி

Bigg Boss 7: விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடுதலாக இருக்கும். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முன்பு இருந்ததை விட கூடுதலான எதிர்பார்ப்பை கொண்டு இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்றால் இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக இருக்கப் போகிறதாம்.

ஆகையால் எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்பது போல ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி தான் பிக் பாஸ் 7 இருக்கப் போகிறது. அதேபோல் தான் போட்டியாளர்களையும் விஜய் டிவி வலை வீசி தேடி எடுத்துள்ளனர். அந்த வகையில் முரட்டு வில்லன் ஒருவரை தட்டி தூக்கி இருக்கிறது விஜய் டிவி என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read : டிஆர்பி கிங்கை வளைத்துப் போட்ட விஜய் டிவி.. ரெக்கார்டை உடைக்க போகும் பிக் பாஸ் சீசன் 7

அதாவது பிக் பாஸ் வீட்டுக்கு சர்ச்சையான போட்டியாளர்கள் கண்டிப்பாக தேவை. அவர்கள் கொளுத்திப் போடுவதால் தான் டிஆர்பி எகிர்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் பங்கு பெற உள்ளதாக கூறப்படுகிறது. முரட்டு வில்லனாக நடித்து வந்த இவர் இப்போது காமெடி கதாபாத்திரங்களிலும் ஏற்று நடித்து வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்திலும் முக்கிய வில்லன்களுள் ஒருவராக மன்சூர் அலிகான் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தால் ரணகளமாக இருக்கும் என்பதால் விஜய் டிவி இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். ஏனென்றால் மன்சூர் அலிகான் இதற்கு சம்மதிப்பாரா என்பது சந்தேகம்தான்.

Also Read : டிஆர்பி இல்லாததால் சீரியலில் இருந்து விலகும் விஜய் டிவி கதாநாயகன்.. இவருக்கு பதில் இவரா!

ஏற்கனவே ஒருமுறை விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராஜு கலந்து கொண்டதை வேடிக்கையாக பேசி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பிச்சை எடுத்து சாப்பிடலாம் என்று அவர் பேசிய ப்ரோமோ அப்போது வைரலாக பரவியது. இப்படி இருக்கும் சூழலில் அவர் பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் மன்சூர் அலிகான் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இந்த சீசன் வேற லெவல் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எதையும் நேரடியாக மற்றும் வெளிப்படையாக மன்சூர் அலிகான் பேசுவதால் எப்படியும் பிக் பாஸ் வீடு புகையும். இதனால் பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

Also Read : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் ஏற்பட்ட சிக்கல்.. விஜய் டிவியின் பாலிடிக்ஸ், ஒத்து ஊதும் இரண்டு பிரபலங்கள்

Trending News