புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 6 போட்டியாளர்கள்.. செம போரிங் கண்டெஸ்ட்டை துரத்த போட்ட பிளான்

Bigg Boss Season 7 This Week Nomination List: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 6 வாரங்களை கடந்த நிலையில் ஏழாவது வாரத்தில் வைல்ட் கார்டு போட்டியாளரான தினேஷ் கேப்டனாக தேர்வானார். இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வாரம் சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து அடுத்து யார் வெளியேற போகிறார் என்பதற்கான நாமினேஷன் லிஸ்ட் ரெடி ஆனது. நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐஷு எலிமினேட் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஒருவரை செம போரிங் கண்டஸ்டண்ட் என முத்திரை குத்தி ஹவுஸ் மேட் பிக் பாஸ் வீட்டில் இருந்து துரத்த பிளான் போட்டு விட்டனர்.

விக்ரம், ஆர்ஜே பிராவோ, அக்ஷயா, மணி, விசித்ரா, பூர்ணிமா ஆகிய ஆறு பேர் இந்த வாரம் நாமினேஷனில் இருக்கின்றனர். ஆர்.ஜே. பிராவோ இந்த வீட்டில் பெருசா எதுவுமே செய்யவில்லை, அக்ஷயா வீக் கண்டஸ்டண்ட் என்றும் விசித்ரா போலியாகவே இந்த வீட்டில் இருக்கிறார், மணி இந்த வீட்டில் இன்னும் ஓபன் அப் ஆக வேண்டும், பூர்ணிமா அவருடைய தோழியான மாயாவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறார் என, இது போன்ற காரணங்களால் ஹவுஸ் மீட்ஸ் இந்த ஆறு போட்டியாளர்களையும் நாமினேட் செய்திருக்கின்றனர்.

Also read: வெளியிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம்.. கடைசி நேர எவிக்சனில் நடந்த குளறுபடி

அதிலும் நிறைய போட்டியாளர்கள் விக்ரம் செம போரிங் கண்டஸ்டன்ட்டாக இந்த ஆறு வாரமும் இருக்கிறார். ஒரு நாள் கூட அவர் சுவாரசியமாக எதையும் செய்யவில்லை. அவர் இந்த வீட்டில் இருப்பதே வேஸ்ட் என வீட்டை விட்டு வெளியேற்ற பார்க்கின்றனர்.

இதை விக்ரம் வீட்டாரே நேற்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். ‘இன்னும் விக்ரமிடம் நிறைய எதிர்பார்க்கிறோம், இந்த சான்ஸ் இனி உன்னுடைய வாழ்க்கையில் கிடைக்காது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்’ என விக்ரமின் தங்கை மறைமுகமாக வார்னிங் செய்திருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டியாக சின்னத்திரை ரசிகர்களிடம் பேமஸ் ஆன விக்ரம், பிக் பாஸ் வீட்டில் எதிர்பார்த்த அளவு எதுவும் செய்யாததால் ரசிகர்களும் அவர் மீது வெறுப்பில் இருக்கின்றனர். இந்த வாரம் விக்ரம் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also read: 42 நாட்களுக்கு ஐஷு வாங்கிய மொத்த சம்பளம்.. லவ் ட்ராக் ஓட்டியதாலே லட்சங்களை வாரி இறைத்த விஜய் டிவி

Trending News