நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 9 பேரில் இந்த வாரம் வெளியேறும் சூனியக் கிழவி.. வைரலாகும் ஓட்டிங் லிஸ்ட்

Bigg Boss Season 7 This Week Voting List: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த வாரம் அதிரடியாக 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தனர்.

அவர்கள் ஐந்து பேரும் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். அவர்களுடன் ஏற்கனவே பிக் பாஸில் இருந்த மாயா, ஐசு, மணி, அக்ஷயா ஆகிய 4 பேருடன் மொத்தமாக ஒன்பது பேர் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர்.

இந்த ஒன்பது பேரில் யார் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமான ஓட்டிங் லிஸ்ட் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவுகிறது. இதில் பிக் பாஸ் வீட்டில் சூனியக் கிழவியாக இருந்து ஏகப்பட்ட பிரச்சனைகளை கிளப்பி விட்டுக் கொண்டிருந்தவர் இப்போது வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது.

Also read: அம்மா சென்டிமென்ட் எல்லாம் உங்களுக்கு மட்டும் தானா.. மோசமான ஸ்ட்ராடெஜியை பயன்படுத்தும் பிரதீப்

இந்த ஒன்பது பேரில் அர்ச்சனா தான் அதிக ஓட்டுக்களை பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக தினேஷ், மணி, ஆர்ஜே பிராவோ, அக்ஷயா, கானா பாலா ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர். கடைசி மூன்று இடத்தில் அன்ன பாரதி, ஐசு, மாயா ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் மூன்று பேரும் தான் இப்போதைக்கு டேஞ்சர் ஜோனில் இருப்பவர்கள். அதிலும் இந்த சீசனில் செம ஸ்ட்ராங் கண்டஸ்டன்ட்டாக பார்க்கப்பட்ட மாயா இந்த வார ஓட்டிங் லிஸ்டில் மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 7ன் இந்த வார ஓட்டிங் லிஸ்ட்

this-week-BB7-voting-list-1-cinemapettai
this-week-BB7-voting-list-1-cinemapettai

மாயா தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் நபர். இவர் பிக் பாஸ் வீட்டில் இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என போட்டியாளர்கள் நினைத்தது மட்டுமல்லாமல் இப்போது ரசிகர்களும் நினைத்து விட்டதால் மிகக் குறைந்த ஓட்டுக்களை கொடுத்து டாட்டா காட்டி அனுப்பி விடுகின்றனர்.

இந்த வாரம் வெளியேறும் சூனியக் கிழவி மாயா

this-week-BB7-voting-list-2-cinemapettai
this-week-BB7-voting-list-2-cinemapettai

Also read: ICU-வில் திருட்டுத்தனமாக நுழைந்த மீனா.. சரியான நேரத்தில் என்ட்ரி கொடுத்த சகுனிகள்