சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

உறுதியானது பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர்.. இரண்டாவது இடம் கூட சூனியக் கிழவிக்கு கிடைக்காமல் போச்சே.!

Bigg Boss Season 7 Title Winner and runner up: விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே ஷூட்டிங் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் யார் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்ற, உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. 105 நாட்களைத் தாண்டி, டாப் 5 ஃபைனல் லிஸ்ட் ஆக மணி, விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா, மாயா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுவரை நடந்த எந்த சீசனிலும் இல்லாத வகையில் முதன்முதலாக வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த போட்டியாளர்தான் சீசன் 7ன் டைட்டில் வின்னர் ஆகிறார். வழக்கம்போல் இவரும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை தான். அது வேறு யாரும் அல்ல அர்ச்சனா தான் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

ஆனால் இரண்டாவது இடம் சூனியக் கிழவி மாயாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ரன்னராக மணி தேர்வாகியிருப்பதாகவும், மூன்றாவது இடம் தான் மாயாவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல் விஷ்ணு மற்றும் தினேஷ் இருவரும் வாக்குகளின் அடிப்படையில் அடுத்தடுத்து வெளியேற போகின்றனர்.

Also Read: சரசரவென குவியும் ஓட்டு.. 2ம் இடத்துக்கு முன்னேறிய போட்டியாளர், பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் 

துவக்கத்திலிருந்தே அழுது அழுதே அனுதாப அலையை மக்களிடம் சம்பாதித்து, அலேக்கா டைட்டிலை தட்டி தூக்கிவிட்டார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கு அதிகமான ரசிகர்களும் இவரை ஃபாலோ பண்ணி வருகின்றனர்.

விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாகவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்த அர்ச்சனா-விற்கு நிஜமாகவே ரசிகர்கள் ஓட்டு போட்டு தான் ஜெயிக்க வைத்தார்களா? அல்லது  விஜய் டிவி தன்னுடைய வேலையை காட்டி விட்டதா? என்ற விவாதமும் சோசியல் மீடியாவில் வெடிக்கிறது. இருந்தாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் 28-வது நாளில் வைல்ட் கார்டு  என்ட்ரி கொடுத்த கண்டஸ்டண்டான அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகி, வரலாறு படைத்திருக்கிறார். இந்த விஷயம் தான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. 

Also Read: வனிதா உதவியோடு இறுதி வாரத்தில் களமிறங்கி இருக்கும் மாயா.. Bully Gang ஸ்கூலுக்கு அக்கா தான் ஹெட்மாஸ்டர் போல

Trending News