வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அதிரடியாக வெளியான பிக்பாஸ் சீசன் 7 அப்டேட்.. கவர்ச்சி நடிகையை களம் இறக்க தயாராகும் விஜய் டிவி

Actor Kavin: கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து விஜய் தொலைக்காட்சியின் டி ஆர் பிக்கு பக்கபலமாக அமைந்திருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை, இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றபடி சற்று மாற்றி இந்தி, மராத்தி, கன்னடம் என பல மொழிகளிலும் கொண்டு வந்தார்கள். விஜய் டிவியும் இந்த நிகழ்ச்சியை தற்போது தமிழில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. முதல் சீசனில் என்ன நடக்கிறது என்றே பல நாட்களுக்கு நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு புரியாமல் தான் இருந்தது.

அதன்பின்னர் இந்த நிகழ்ச்சி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதுவரை நடந்த ஆறு சீசர்களின் பிக் பாஸ் மூன்றாவது சீசனுக்கு தான் அதிக டிஆர்பி மற்றும் ரசிகர்களும் இருந்தார்கள். அதேபோன்று இந்த சீசனில் கலந்து கொண்ட நிறைய போட்டியாளர்களுக்கு தான் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் நிறைய வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. மற்ற சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இன்று வரை சினிமாவில் ஜெயிக்க போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Also Read:விறுவிறுப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 ஆடிஷன்.. யாரு கலந்துக்குறாங்க, எப்ப துவங்கப்படுகிறது தெரியுமா.?

பிக் பாஸ்க்குள் வந்தாலே சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என்று நினைத்து வந்த நிறைய பேருக்கு இந்த ஷோ ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாகத்தான் அமைந்தது. அவர்களை பொறுத்த வரைக்கும் இந்த நிகழ்ச்சி கத்தி மேல் நடக்கும் பாதை தான். கடந்த ஐந்து மற்றும் ஆறாவது சீசன் பொதுமக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் விஜய் டிவி தற்போது ஏழாவது சீசனை தொடங்குவதற்கான அத்தனை வேலைகளையும் ஆரம்பித்து இருக்கிறது.

இந்த சீசனிலும் போட்டியாளர்களை எந்த முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தரவரிசைப்படி பிரித்திருக்கிறார்கள். அதன்படி, இரண்டு செலிபிரிட்டிகள், மக்களுக்கு பரீட்சையமில்லாத இரண்டு செலிப்ரட்டிகள், சின்ன திரையை சேர்ந்த இரண்டு நடிகர்கள், தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் இரண்டு பேர், பொதுமக்களில் இருந்து மூன்று பேர், மாடலிங் துறையை சேர்ந்த இரண்டு பேர், சோசியல் மீடியா பிரபலங்கள் இரண்டு பேர், திருநங்கை 1, சமூக சேவை அல்லது அரசியலை சேர்ந்த இரண்டு பேர், பேச்சாளர்கள் இரண்டு பேர், அயல் நாட்டவர்கள் இரண்டு பேர் மற்றும் நடனம் ஆடுபவர்கள் இரண்டு பேர் என செலக்ட் செய்ய இருக்கிறது விஜய் டிவி.

Also Read:லிவிங் ரிலேஷன்ஷிப்பிற்கு சம்மதித்த அம்மா.. திருமணத்திற்கு முன்பே ஒரே வீட்டில் வாழும் பிக்பாஸ் ஜோடி

மேலும் இந்த சீசனில் கவர்ச்சிக்கும் பஞ்சம் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கும் விஜய் டிவி பிரபல கவர்ச்சி நடிகை லட்சுமி ராயை இந்த சீசனில் பங்கெடுக்க அழைப்பு விடுத்திருக்கிறது. ஏற்கனவே கவர்ச்சி நடிகையாக இருந்த மும்தாஜ் இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு அவர் மீது இருந்த அடையாளத்தை மாற்றிக் கொண்டார். ஆனால் நடிகை யாஷிகா ஆனந்த் மொத்தமாக தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். லட்சுமி ராய் இதில் எந்த ரகம் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கொரோனா காரணமாக அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டுக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த சீசன் முடியும் பொழுது உலகநாயகன் கமலஹாசன் மக்களிடையே மீண்டும் சந்திப்போம் என்று சொல்லிவிட்டு சென்றார். எனவே கண்டிப்பாக இந்த சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்குவார் என்று யூகங்கள் இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு இனிவரும் காலங்களில் தான் தெரியும்.

Also Read:ரச்சிதாவிற்கு 2வது திருமணம்.. ரகசிய காதலை அம்பலப்படுத்திய பயில்வான்

Trending News