வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக் பாஸ் 7 ஆவது சீசனுக்கு தயாரான EVP ஃபிலிம் சிட்டி.. ஆனா இந்த வாட்டி ரெண்டு பிக்பாஸ் வீடு!

Bigg Boss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. இதுவரை ஆறு சீசன்களை வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சி கடந்து இருக்கிறது. தற்போது ஏழாவது சீசன் எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சேனலின் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

எப்போதுமே ஜூன் அல்லது ஜூலை மாதத்தின் இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விடும். இந்த முறை ஆகஸ்ட் மாதம் ஆகியும் புரோமோ கூட வெளியாகவில்லை. மேலும் பிக் பாஸ் ஆரம்பிக்க வேண்டிய நேரத்தில் கதாநாயகி என்னும் பெயரில் ராதிகா சரத்குமார் மற்றும் கே எஸ் ரவிக்குமார் நடுவர்களாக பங்கேற்கும் ரியாலிட்டி ஷோ ஒன்று ஆரம்பித்திருக்கிறது.

Also Read:காட்டுத்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.. வாய்ப்புக்காக தீயாக செய்யும் வேலை

அதே நேரத்தில் உலகநாயகன் கமலஹாசனும் இந்தியன் 2 மற்றும் கல்கி படங்களில் பிசியாக இருக்கிறார். ஒருவேளை இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லையோ என ரசிகர்கள் சந்தேகத்துடன் இருக்கும் நேரத்தில், தற்போது இந்த நிகழ்ச்சி பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் இது மிகப் பெரிய ட்விஸ்ட்டுடன் வந்திருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி காண ப்ரோமோ இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கப் போகிறது. இது எல்லோருக்குமே கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனால் இந்தி மொழியில் ஏற்கனவே இது போன்ற இரண்டு வீடு கான்செப்ட் ஒரு சீசனில் வந்திருக்கிறது.

Also Read:இந்த வார டிஆர்பி யில் முதல் 6 இடத்தை பிடித்த சீரியல்.. எதிர்நீச்சலை பின்னுக்கு தள்ளிய டிவி எது தெரியுமா?

அதைத்தான் இந்த முறை தமிழில் முதன்முறையாக அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். இரண்டு வீடு என்பதால் ஒருவேளை போட்டியாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்களோ என்று பார்த்தால், அப்படி கிடையாது. ஒரு வீட்டில் இந்த சீசனுக்கான போட்டியாளர்களும், மற்றொரு வீட்டில் கடைசி சீசனில் இருந்த போட்டியாளர்களும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

அல்லது இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களையே இரண்டு குழுக்களாக பிரித்து, இரண்டு வீடுகளில் தங்க வைக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு வாரம் முழுக்க இரண்டு வீட்டை பற்றியும் ஒருவருக்கொருவர் தெரியாத அளவுக்கு சீக்ரெட் ஆக வைக்கப் போகிறார்களாம். இதற்காக EVP ஃபிலிம் சிட்டியில் இரண்டு வீடுகளுக்கான செட்டப் போடப்படும் என தெரிகிறது.

Also Read:மறுஜென்மம் பெற்ற தனம்.. இறுதி அத்தியாயத்தை நோக்கி பாண்டியன் ஸ்டோர்ஸ்

Trending News