ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிக் பாஸ் 7ல் வின்னர், ரன்னர் இவர்கள்தான்.. டாப் 5 லிஸ்ட் ரெடி

Bigg Boss season 7 winners:  இன்னும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சில வாரங்களில் கிராண்ட் பினாலே நடக்கப்போவதால் முன்பை விட ஒவ்வொரு எபிசோடும் சூடு பிடிக்கிறது. அதிலும் இந்த வாரம் முழுவதும் ஃப்ரீ டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் கடந்த சில நாட்களாகவே வந்து சர்ப்ரைஸ் கொடுக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7ல் டாப் 5 யார் என்பதை லிஸ்ட் போட்டு ரெடி பண்ணி வைத்துவிட்டது. இதில் யார் வின்னர், யார் ரன்னர் என்பதை தெரிந்ததும் பிக் பாஸ் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். இதுவரை வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள் யாருமே இவ்வளவு நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததில்லை. ஆனால் அந்த விஷயத்தை தினேஷ், அர்ச்சனா இருவரும் முறியடித்து விட்டனர்.

இவர்கள் இருவருக்கும் கிடைத்த ரசிகர்களால் இப்போது டாப் 5 லிஸ்டில் இருக்கின்றனர். அதேபோல் தான் ஒவ்வொரு சீசனிலும் வயதில் மூத்த ஒருவர் கலந்து கொள்வார்கள். ஆனால் அவர்களாலும் ஒரு சில வாரங்கள் மட்டுமே தாக்கு பிடிக்க முடியும். ஆனால் இதையும் விசித்ரா மாற்றி விட்டார். அவருக்கும் டாப் 5 லிஸ்டில் இடம் கிடைத்திருக்கிறது.

Also Read: பிரதீப்பை போல், அர்ச்சனாவை வெளியேற்ற மாயா போட்டிருக்கும் திட்டம்.. சூனியக் கிழவியின் ஆட்டம் ஆரம்பம்

பிக் பாஸ் சீசன்7ன் வின்னர், ரன்னர்

அதேபோல் எந்த நம்பிக்கையில் அடிக்கடி ‘நான் தான் டைட்டில் வின்னர்’ என்று அவருக்குள்ளே சொல்லிக் கொள்கிறார் என கலாய்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டி கண்ணனும் இந்த லிஸ்டில் இருப்பது தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. பிக் பாஸ் சீசன் 7ல் 5வது இடம் விக்ரமுக்கும், 4வது இடம் விசித்ராவுக்கும் தான் கிடைக்கப் போகிறது. அதேபோல் டைட்டில் வின்னர் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் நினைத்த தினேஷ் 3வது இடத்தை பிடிப்பார். மேலும் 2வது இடம் மாயாவுக்கு தான்.

இவர் என்னதான் தொடக்கத்தில் சில சர்ச்சையில் சிக்கி கமலிடம் வாங்கி கட்டிக் கொண்டாலும், அதன் பின் தன்னுடைய ஆட்டத்தை மாற்றி இந்த சீசனின் வின்னருக்கு பயங்கர டஃப் கொடுத்துள்ளார். முதல் இடம் அர்ச்சனாவிற்கு தான் கிடைக்கும். இவர் இந்த சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்தபோது முதல் வாரம் அழுது கொண்டே இருந்தார். ஆனால் அதை வைத்து ஹவுஸ் மேக்ஸ் கலாய்த்தபோது, சிங்கப்பெண் போல் சீறி பாய்ந்து ரவுண்ட் கட்டிவிட்டார். இதுதான் ரசிகர்களையும் கவர்ந்து அவர் டைட்டில் வின்னர் ஆவதற்கும் காரணம் ஆகிவிட்டது.

இதுவரை நடந்து முடிந்த ஆறு பிக் பாஸ் சீசன்களில் ஒரே ஒரு பெண் போட்டியாளரான ரித்விகா தான் டைட்டிலை அடித்தார். அதன் பிறகு இப்போது சீசன் 7ல் அர்ச்சனா இரண்டாவது முறையாக டைட்டிலைத் தட்டி தூக்கப் போகிறார். இவரும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை தான். ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்த இவர், இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பேமஸ் ஆகிவிட்டார். இந்த லிஸ்ட்டை விஜய் டிவி முன்கூட்டியே தயார் செய்துவிட்டு தான் நிகழ்ச்சியை துவங்கி இருக்கின்றனர் என்று நெட்டிசன்களும் சோசியல் மீடியாவில் வறுத்தெடுக்கின்றனர்.

Also Read: மணியை எச்சரித்த ரவீனா ஃபேமிலி.. என்னடா இது! டிஆர்பிக்காக கலர் கலரா படம் காட்டுறீங்க

Trending News