ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

டைட்டில் கிடைக்கலனா என்ன, வெயிட்டான சம்பளத்துடன் வெளியேறிய தீபக்.. எத்தனை லட்சங்கள் தெரியுமா?

Bigg Boss 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 99 ஆவது நாளில் தீபக் எலிமினேட் ஆகியிருக்கிறார். நேற்று அருண் பிரசாத் வெளியேறிய நிலையில் தீபக் இன்று வெளியே வந்து விடுவார்.

தீபக் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகியிருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான்.

இறுதி நாளில் வெற்றி மேடையில் தீபக் மற்றும் முத்துக்குமரனுக்கு இடையே தான் போட்டி இருக்கும் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

ஏன் தீபக் தான் டைட்டில் வின்னர் என்று கூட பல பேர் அடித்து சொன்னார்கள். இதற்கு காரணம் வெளியில் எந்த ஒரு PR வேலையும் இல்லாமல் இவ்வளவு நாள் உள்ளே தாக்குப்பிடித்து இருக்கிறார்.

வெயிட்டான சம்பளத்துடன் வெளியேறிய தீபக்

தீபக் இவ்வளவு நாள் இந்த போட்டியில் கலந்து கொண்ட விதம், பிரச்சனைகளை சமாளித்த விதம் என எல்லாமே மக்களிடையே பாராட்டை பெற்றது.

அது மட்டும் இல்லாமல் உள்ளே இருந்த இறுதிப்போட்டியாளர்களில் சீனியர் ஆர்டிஸ்ட் இவர். தற்போது இவருடைய சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.

ஒரு நாளைக்கு 30,000 சம்பளமாக பேச தீபக் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

99 ஆவது நாள் எலிமினேட் ஆன நிலையில், இவருக்கு 29 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது

Trending News