புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரம்யா பாண்டியனை ரகசிய திருமணம் செய்தாரா சோம்.? மாலையும் கழுத்துமாக வெளிவந்த புகைப்படத்தால் பரபரப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோம் மற்றும் ரம்யா பாண்டியன் போட்டியாளராக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பாசத்தைப் பொழிந்து வந்தனர்.

இதனைப் பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிலும் மற்றும் ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதல் செய்வதாக பல கிசுகிசுக்களை சமூக வலைதளங்களில் கூறி வந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோம் மற்றும் ரம்யா பாண்டியன் 100 நாட்களை வெற்றிகரமாக கடந்து வந்தனர். ஆனால் சமீபத்தில் சோம் மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சக போட்டியாளரான ஆரி வெற்றியாளராக அறிவித்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்லிருந்து வெளிவந்த அனைத்து போட்டியாளர்களும் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற பெயரில் ஒன்றாக சந்தித்து தங்களது அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் சமூக வலைதளத்தில் ஒருவரைப்பற்றி என்ன என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் ஒரு கற்பனையாக வைத்து பல தகவல்களை பரப்பி வருகின்றனர்.

som sekhar ramya pandian
som sekhar ramya pandian

அந்த வகையில் பிக்பாஸ் போட்டி மூலம் ஓரளவு ரசிகர்களிடம் பிரபலமடைந்த சோம் மற்றும் ரம்யா பாண்டியன் திருமணம் செய்ததாக தகவல் ஒன்றை பரப்பி, பின்பு இவர்கள் திருமணக்கோலத்தில்லிருக்கும் புகைப்படத்தினை எடிட்டிங் செய்து வெளியிட்டுள்ளனர்.

இதனை பார்த்த சோமு மற்றும் ரம்யா பாண்டியன் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்று எங்களுக்குள் காதல் எதுவும் கிடையாது எனவும் கூறியுள்ளனர்.

மேலும் இந்த மாதிரியான பொய்யான தகவல்களை பரப்பி ஒருவரின் வாழ்க்கையில் விளையாடக் கூடாது என அவர்களது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Trending News