புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விசித்ராவை வச்சு செய்த 5 போட்டியாளர்கள்.. கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்து வெளியேறிய சம்பவம்

Bigg Boss Tamil Season 7 Today Promo: இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ராவை 5 போட்டியாளர்கள் வச்சு செய்து விட்டனர். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு போன அவர் வாயில் என்ன வார்த்தை வருகிறது என்று கூட தெரியாமல் சரமாரியாக கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டார்.

அது மட்டுமல்ல ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறி தன்னையே அறியாமலும் அழுதுவிட்டார். அந்த வீட்டில் எனக்கு பைத்தியமே பிடிக்குது என்றும் கதறுகிறார். இந்த வார கேப்டனான பூர்ணிமாவிடம் விசித்ரா ‘எதுக்குடி என்ன ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பிச்சீங்க’ என்று சண்டைக்கு நிற்கிறார்.

ஏனென்றால் அந்த அளவிற்கு ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கும் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் கிளாமர் குயின் விசித்ராவை வச்சு செய்கின்றனர்.  பிக் பாஸ் வீட்டில் மூத்தவராக இருக்கும் விசித்ரா அப்போது மற்ற போட்டியாளர்களுக்கு அறிவுரை சொல்வார்.

Also read: அம்மா சென்டிமென்ட் எல்லாம் உங்களுக்கு மட்டும் தானா.. மோசமான ஸ்ட்ராடெஜியை பயன்படுத்தும் பிரதீப்

ஆனால் வைல்ட் கார்ட் என்ட்ரிகளாக உள்ளே வந்திருப்பவர்கள் யாருமே விசித்ராவை சுத்தமா மதிக்கவில்லை. அவர் சமையல் செய்யும்போது வேண்டிய உதவிகளை செய்யாமல் எனக்கென்னன்னு இருக்கிறார்கள்.  அதிலும் குறிப்பாக அர்ச்சனா விசித்ராவிடம் ஓவராக திமிரு காட்டுகிறார்.

இதனால் பொறுமையை இழந்த விசித்ரா விதிகளை மீறி ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவரை சமாதானப்படுத்தி எப்படியாவது மறுபடியும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் முயற்சிக்கின்றனர். விசித்ரா விதிகளை மீறி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததால் கேஸ் கட் ஆகும்.

கேஸ் இல்லாம யாராலும் சமைக்க முடியாது, எல்லாரும் சாப்பிடாமல் மூடிக்கிட்டு இருங்க’ என்று கெட்ட வார்த்தைகளால் விசித்ரா அர்ச்சனை செய்கிறார். இந்த சம்பவத்தால் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போனார்கள். இன்றைய நிகழ்ச்சி விசித்ராவால் சூடு பிடித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைய ப்ரோமோ!

Also read: ஸ்மோக்கிங் ரூமில் ஒரே லிப் லாக் சத்தமா இருக்கு ஆண்டவரே.. என்னடா இது பிக்பாஸ் வீடா இல்ல அந்த மாதிரி இடமா?

Trending News