வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சூனியக் கிழவியை அலறவிட்ட ஆண்டவர்.. இன்னைக்கு சம்பவம் இருப்பது உறுதி

Bigg Boss Tamil Season 7 | 12th November 2023 – Promo 3: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. அதிலும் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை பார்த்தால் நிச்சயம் இன்றைக்கு சம்பவம் இருக்கு. ஏற்கனவே நேற்று முழுவதும் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்தது சரியா தவறா என காரசாரமாக கமல் விவாதித்தால், அதன் தொடர்ச்சியாக மரியாதை எவ்வளவு முக்கியம் என்றும், எதைக் கொடுக்கிறீர்களோ அதுதான் உங்களுக்கு திரும்பி கொடுக்கப்படும் என்பதை போட்டியாளர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக கமல் உணர்த்தினார்.

அதேபோல் இன்றைய நிகழ்ச்சியில் கடந்த வார கேப்டன்ஷிப்பை பற்றி பேசினார்.  ஒரு போட்டியாளர் கூட மாயாவின் கேப்டன்ஷிப்பை பற்றி பாசிட்டிவான கருத்தை கொடுக்கல. மாயாவின் நெருங்கிய தோழியான விஷ பாட்டில் பூர்ணிமா கூட, ‘மாயாவின் கேப்டன்ஷிப்பில் தவறு இருந்தது’ என்று ஒத்துக் கொண்டார்.

உடனே மாயா, ‘என்னோட கேப்டன்ஷிப்பில் தவறு நடந்தது உண்மைதான். அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன்’ என்று ஆஜரானார். இருப்பினும் அர்ச்சனா, விசித்ரா இருவரும் சேர்ந்து டிராமா போட்டு என்னை ட்ரிக்கர் செய்து விட்டேன் என்று குற்றம் சாட்டினார். அதற்கு கமல், ‘இப்போது எப்படி பொறுமையாக பேசுகிறீர்கள்.

Also Read: தினேஷ் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது, இதுதான் வழி.. மாயா போட்டிருக்கும் சதி திட்டம்

அதேபோன்று பொறுமையாக அவர்களுக்கு எடுத்துரைத்திருக்கலாம். அப்படி மட்டும் செஞ்சிருந்தா, உங்களது நட்பு வட்டாரமும் பெருகி இருக்கும். சிறந்த கேப்டனாகவும் பிக் பாஸ் விஜய் கடந்த வாரம் முழுவதும் செயல்பட்டிருக்கலாம்’ என்று ஆண்டவர் சரமாரியாக விலாசினார். அப்படியும் தன்னுடைய தரப்பு நியாயத்தை மட்டுமே பேசிக் கொண்டிருந்த மாயாவை அவர் பாணியிலே பேசி அலறவிட்டார்.

கடந்த வாரம் முழுவதும் ஓவரா ஆடிய சூனியக் கிழவியின் ஆட்டம்  இன்றைய எபிசோடில் அடங்கிப் போய்விடும் என்பதை தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ காட்டிவிட்டது. இன்றைய நிகழ்ச்சியை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல மாயாவின் கூட்டாளியான ஐசு இன்று எலிமினேட் ஆகுவதும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ!

Also Read: ரெட் கார்டு நிறைய இருக்கு, அரண்டு போன மாயா, பூர்ணிமா.. ஆண்டவரே இதைத்தான் எதிர்பார்த்தோம்

Trending News