செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

தப்பை ஒத்துக்க முடியாமல் தலைமறைவாக இருக்கும் A டீம்.. மாயாவுக்கு பக்க வாத்தியம் பாடிய போட்டியாளர்கள்

Bigg Boss A Team: பிக் பாஸ் சீசன் 7 முடிந்த நிலையிலும் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த விஷயம் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதுவரை நடந்த எந்த சீசன்களிலும் இல்லாத அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மாயா மற்றும் பூர்ணிமா தான். எங்க, யாரை எப்பொழுது அடித்தால் வீழ்வாங்கன்னு தெரிந்து வைத்து மாயா காய் நகர்த்திருக்கிறார்.

இவருடைய படைத்தளபதியாக பூர்ணிமா கூடவே இருந்து மற்ற போட்டியாளர்களை காலி செய்ய நன்றாக சகுனி வேலையை பார்த்திருக்கிறார். அத்துடன் சில போட்டியாளர்கள் இவர்களுக்கு பக்க வாத்தியம் பாடியிருக்கிறார்கள். அதனாலேயே இவர்கள் A டீம் ஆக தனியா பிரிந்தார்கள். அந்த வகையில் மாயா அணியில் பூர்ணிமா, ஜோவிகா, விக்ரம், நிக்சன், அக்ஷயா மற்றும் ஐஸ்வர்யா அல்ல கைகளாக இருந்தார்கள்.

அதன்படி மாயாவிற்கு நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டு வாரத்திலேயே தெரிந்து விட்டது பிரதீப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்று. அதனால் இவருடைய பெயரை எப்படியாவது டேமேஜ் பண்ணனும் என்று நினைத்த மாயாவுக்கு கிடைத்தது தான் பிரதீப்பின் குதர்க்கமான பேச்சு. இதை வைத்து இவரை காலி பண்ண வேண்டும் என்று திட்டம் தீட்டியதுதான் ரெட் கார்டு.

Also read: அர்ச்சனாவின் வெற்றியை ஒண்ணுமில்லாமல் ஆக்க நடக்கும் சதி.. மாயா, பூர்ணிமா கொஞ்சமாச்சும் திருந்துங்க

அதற்கு ஏற்ற மாதிரி ஐஸ்வர்யா, நிக்சன், மணி, ரவீனா, பூர்ணிமா, விஷ்ணு மற்றும் மாயா அனைவரும் சேர்ந்து பிரதீப்புக்கு எதிராக போர் கொடியை தூக்கினார்கள். அதன்படி இவர்கள் எதிர்பார்த்தபடி பிரதிப்பும் வெளியேறினார். ஆனால் தற்போது நிகழ்ச்சி முடிந்து வெளிவந்த ஒவ்வொருவரும் பிரதீப்புக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டு முற்றிலும் தவறானது என்று புரிந்து கொண்டார்கள்.

ஆனால் தற்போது இவர்கள் ஏதாவது ஒரு பேட்டியில் ஆமாம் நாங்கள் தவறாக ரெட் கார்டு கொடுத்து விட்டோம் என்று சொன்னால் அதுவே இவர்களுக்கு பேக் பையராக அமைந்து விடும். அத்துடன் இவர்கள் அனைவரும் சரண்டர் ஆகி விட்டால் கமல் கெதியும் அதோ கெதி தான். ஏனென்றால் இவர்கள் உண்மையை ஒத்துக் கொண்டால் கமல் செய்த தவறும் வெளியே வந்துவிடும்.

அதனாலேயே சில போட்டியாளர்களிடம் விஜய் டிவி சேனலிடம் இருந்து யாரும் இப்போதைக்கு எந்த பேட்டியும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள் என தகவல் வெளியாயிருக்கிறது. அதனால் இதற்கு முக்கிய காரணமாக இருந்த மாயா, நிக்சன், ஐஸ்வர்யா, ரவீனா இவர்கள் யாரும் இப்பொழுது வரை எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. அதனாலேயே இவர்கள் மீடியா கண்ணுக்கு படாமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்கள்.

Also read: மீடியாவை பார்த்தாலே தெறித்து ஓடும் 5 பிக் பாஸ் விஷ பூச்சிகள்.. காசு போட்டு விளம்பரம் தேடிய பூர்ணிமா

Trending News