வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

உதயநிதியுடன் கைகோர்க்கும் பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. கொண்டாடும் ஆர்மி!

தமிழ் சினிமாவில் தடையற தாக்க, தடம் போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மகிழ் திருமேனியின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நிதி அகர்வால் நாயகியாக நடிக்கவுள்ளார். அதேபோல் மெட்ராஸ் படம் மூலம் கவனம் ஈர்த்த கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ஆரவ் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஆரவ்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா உடன் காதல் சர்ச்சையில் சிக்கி தொடக்கத்தில் சறுக்கினாலும் இறுதிவரை நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியின் வெற்றியாளரானவர் ஆரவ். இதனைத் தொடர்ந்து மார்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள ராஜபீமா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஆரவ் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடிக்க உள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

aarav-stalin
aarav-stalin

Trending News